செல்போன் பின் கவரில் பணம்: மறந்தும் கூட இந்த தவறை செய்யாதீங்க.. ஆபத்தானது
செல்போனின் அடியில் பணம் அல்லது கிரெடிட்/டெபிட் கார்டு போன்றவற்றை வைப்பது நம்மை அறியாமல் சில அபாயத்தை ஏற்படுத்தும்.
செல்போன்
இன்றைய உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில், மனித வாழ்க்கையில் செல்போன் ஒரு சாதனமாகிவிட்டது.
அறிவைப் பெறுவதிலும், தகவல்களை பகிர்வதிலும், உலகத்தையே கைத்தொலைபேசியில் காணும் அளவிற்கு அதன் பயன்பாடு விரிந்துள்ளது.
இந்த அளவுக்கு நாம் செல்போனில் அதிக நம்பிக்கையுடன் வாழும் நிலையில், சிலர் செய்யும் ஒரு சாதாரண பழக்கமே செல்போன் கவரில் பணம் மற்றும் கிரெடிட்/டெபிட் கார்டுகளை வைப்பது இது எந்த அளவிற்கு ஆபத்தானது என்பத யாருக்கும் தெரியாது.
ஏன் இது ஆபத்தானது?
தீ மற்றும் வெடிப்பு அபாயம் சமீப காலமாக, செல்போன்கள் தாங்களாகவே வெடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவை பெரும்பாலும் செல்போனின் செயலி (Processor) மற்றும் பேட்டரி அதிக வேலைபாடு காரணமாக அதிக வெப்பம் வெளியேற்றும் போதே நிகழுகின்றன.
பணம் மற்றும் கார்டுகளில் உள்ள ரசாயனங்கள் ரூபாய் நோட்டுகள், பிளாஸ்டிக் கார்டுகள் ஆகியவை ரசாயன அடிப்படையிலான பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. இவையெல்லாம் வெப்பத்துடன் தொடர்பில் வந்தால், தீப்பற்றும் அபாயம் ஏற்படும்.
தவறான வகை செல்போன் கவர்களின் பாதிப்பு சில மோசமான தரத்தில் தயாரிக்கப்படும் செல்போன் கவர்கள் வெப்பத்தை வெளியேற்றாது தடுத்து நிறுத்தும். இதுவும் செல்போனின் உள் வெப்பத்தை அதிகரித்து, அதன் செயல்திறனை பாதித்து தீவிபத்துக்கு வழிவகுக்கும்.
என்ன செய்யலாம்?
செல்போன் கவரின் பின்புறத்தில் பணம், கார்டுகள் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வைக்காதீர்கள்.
முக்கியமான பணத்தையும் அட்டைகளையும் தனி பணப்பையில் வைத்துச் செல்லுங்கள்.
நல்ல தரமுடைய, வெப்பம் வெளியேறும் வசதி உள்ள செல்போன் கவர்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.
செல்போனை அதிக நேரம் வெப்ப சூழ்நிலையில் வைத்திருக்க வேண்டாம்.
சிறிது வசதிக்காக நாம் செய்யும் சில நடவடிக்கைகள், எதிர்பாராத விபத்துகளுக்கு வழிவகுக்கக் கூடும். செல்போன் என்பது நம் கைபேசி சாதனமல்ல, அது ஒரு வெப்பநிலை உருவாக்கும் யந்திரம். அதனுடன் எப்போதும் பாதுகாப்பாக நடந்து கொள்ளவேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |