தூங்கி எழுந்தவுடன் போன் பார்க்கும் பழக்கம் உள்ளதா? அப்போ இந்த ஆபத்து உறுதி
பொதுவாகவே தற்காலத்தில் போன் பாவனை இன்றி யாராலும் வாழ்க்கை நடத்த முடியாது என்பது நிதர்சனம்.
அந்தளவுக்கு தொழில் மற்றும் வணிக துறையில் மட்டுமன்றி கல்வி துறைகளிலும் தற்போது போன் மற்றும் இணையம் இன்றியமையாதது.
அதுமட்டுமன்றி பெருமளவில் அதிகரித்துள்ள சமூக வளைத்தளங்களின் பெருக்கம் மனிதர்களில் உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பெரிதும் தாக்கம் செலுத்தி வருகின்றது.
பெரும்பாலானவர்கள் தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கொஞ்ச நேரம் கூட போன் இன்றி இருப்பதை தவிர்த்து வருகின்றனர்.
இன்னும் சிலர் கழிப்பறைக்கு செல்லும் போதும் போனை கூடவே எடுத்து செல்கின்றனர். இவ்வாறு காலையில் கண்விழிக்கும் போதே போன் பார்க்கும் வழக்கத்தை கொண்டிருப்பது மிகவும் ஆபத்தானது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
காலையில் எழுந்த உடனேயே முதலில் போனில் கண்விழிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
பாதிப்புகள்
ஸ்மார்ட்போன்களில் இருந்து வெளிவரும் ப்ளூ லைட்டானது தூக்கத்தை சீராக்கும் மெலடோனின் என்ற ஹார்மோனின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அது அடுத்த நாளுக்கான தூக்கத்தின் சுழற்சியிலும் பாதிப்பபை ஏற்படுத்தும்.
காலையில் எழுந்தவுடன் ப்ளூ லைட்டில் கண் விழிப்பதால் உங்கள் சர்க்காடியன் ரிதத்தில் குழப்பம் ஏற்படுத்துவதால் நாள் முழுவதும் உங்களின் சோர்வுக்கு இது காரணமாக அமையும்.
போனில் சமூக வலைதள நோட்டிவிக்கேஷனை பார்த்து நாளை ஆரம்பிக்கும் போது சமூக உளவியல் ரீதியில் பதற்றம் மற்றும் மனஅழுத்தம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கின்றது.
இந்த மன அழுத்தம் கார்டிசோல் அளவுகளில் தாக்கம் செலுத்தி இதயத்தின் இயக்கத்தில் தாக்கம் செலுத்துவதால் உடல் ஆரோக்கியத்தையும் இதய ஆரோக்கியத்தையம் வலுவாக பாதிக்கின்றது.
காலையில் எழுந்ததும் முதலில் போனை பார்ப்பது தியானம், உடற்பயிற்சி போன்ற ஆரோக்கியமான பழக்கங்களுக்கு தடையாக இருக்கும். இவ்வாறு பொழுது போக்காக நாளை ஆரம்பித்தால் நாள் முழுவதும் உங்கள் வேலையில் கவன சிதறல்கள் ஏற்படும்.
கல்வி மற்றும் தொழில்முறை சூழல்களில் உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறன் போன்றவற்றில் இது மந்தமான நிலையை ஏற்படுத்தும் எனவே காலையில் எழுந்தவுடன் போன் பார்ப்பது மனதுக்கும் உடலுக்கும் பாரிய பாதிப்பை தோற்றுவிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |