நெருங்கிய நண்பரிடம் கூட இந்த விடயங்களை பகிராதீர்கள்... ஆபத்து உறுதி எச்சரிக்கும் சாணக்கியர்
சாணக்கிய நீதி உலகளாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற ஒரு தத்துவ நூலாக திகழ்கின்றது. இந்த நூல் ஆச்சாரியா சாணக்கியரின் கொள்கைகளையும் தத்துவங்களையும் உள்ளடக்கி தொகுக்கப்பட்டுள்ளது.
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரியா சாணக்கியர்.
இவரின் கருத்துக்களையும் கொள்கைகளையும் பின்பற்றி வாழ்வில் வெற்றியடைந்தவர்கள் ஏராளம்.
அந்தவகையில் சாணக்கிய நீதியின் அடிப்படையில் வாழ்வில் மகிழ்சியும் நிம்மதியும் நிலைக்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட சில விடயங்களை யாரிடமும் சொல்ல கூடாது என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
அப்படி ஒருபோதும் யாரிடமும் பகிரக்கூடாத விடயங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த விடயங்களை பகிர்வது ஆபத்து
சாணக்கிய நீதியின் பிரகாரம் திருமண வாழ்வில் கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் எந்த விடயம் குறித்தும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் ஒருபோதும் பகிர்ந்துக்கொள்ள கூடாது.
குடும்ப வாழ்வில் காதல், தாம்பத்யம், சச்சரவுகள், தவறான புரிதல்கள் என அனைத்தும் கணவன் மனைவிக்குள் மட்டுமே இருக்க வேண்டும் இதனை பகிர்ந்துக்கொள்வது பிற்காலத்தில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.
கணவன் மனைவிக்குள் நடப்பதை வெளியில் சொல்வதால் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிவதற்கு கூட வாய்ப்பு காணப்படுகின்றது. மேலும் அந்த ரகசியங்களை உங்கள் எதிரிகள் உங்களுக்கு எதிரான ஆயுதமாகக்கூட மாற்றலாம்.
சாணக்கியரின் கருத்துப்படி நாம் மற்றவர்களுக்கு கொடுத்த மற்றும் பெற்ற விஷயங்கள் தொடர்பில் மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்ள கூடாது.
அதாவது ஒருவருக்கு அளித்த சிறப்பு பாடங்களை அவரின் அனுமதி இல்லாமல் ஒருபோதும் மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்ள கூடாது. அது அநாகரிகமான செயல் என்கின்றார் சாணக்கியர்.
குறிப்பாக மற்றவர்களுக்கு செய்த உதவி மற்றும் வழங்கிய கொடை அல்லது தர்மம் குறித்து யாரிடமும் பகிரவே கூடாது. இது செய்த தர்மத்துக்கான பலன்களை அழித்துவிடும்.
சாணக்கியரின் கூற்றுப்படி உங்களின் வயது மற்றும் உடல் ரீதியில் இருக்கும் குறைப்பாடுகள் மற்றும் பலவீனம் குறித்து ஒருபோதும் யாரிடமும் பகிர்ந்துக்கொள்ளவே கூடாது. இத்தகைய தகவல்களை வெளிப்படுத்துவது எப்போது வேண்டுமானாலும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |