வீட்டில் மணி பிளாண்ட் இந்த திசையில் வைக்க கூடாதாம் - ஏன் தெரியுமா?
வீட்டில் இருக்கும் இந்த ஒரு திசையில் மட்டும் நமக்கு செல்வம் தரும் மணி பிளாண்டை வைக்க கூடாது என கூறப்படுகின்றது.
மணி பிளாண்ட்
மணி பளாண்டை நாம் நமது வீட்டில் வைத்தால் செழிப்பு, செல்வம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டுவருவதாக கருதப்படுகின்றது.
வாஸ்து சாஸ்திரப்படி ஒரு மணி பிளாண்ட் வீட்டில் வைக்கும் போது அது வைக்க வேண்டிய திசையை அறிதல் மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது.
இதற்கென்று ஒரு மணி பிளாண்ட்டை வீட்டில் வைத்திருக்கும்போது பின்பற்ற வேண்டிய குறிப்பிட்ட திசைகளும் வழிகாட்டுதல்களும் உள்ளன. இந்த திசைகளைப் பின்பற்றுவதன் மூலம் வீட்டில் நேர்மறையான ஆற்றலையும் மிகுதியையும் அதிகரிக்க முடியும்.
அந்த வகையில் மணி பிளாண்டை எந்த திசையில் வைத்தால் நாம் தேடும் நன்மை கிடைக்கும் என்பதை பார்க்கலாம். அதே போல வைக்க கூடாத இடத்தையும் பார்க்கலாம்.
வடக்கு அல்லது கிழக்கு
வடக்கு அல்லது கிழக்கு திசையில் மணி பிளாண்ட் வைப்பது மிகவும் நல்ல விடயமாக பார்க்கப்படுகின்றது.
இந்த திசையில் மணி பிளாண்ட் வைத்தால் வீட்டிற்கு செல்வத்தையும் மகிழ்ச்சியையும் ஈர்க்கும் என்று ஜோதிடத்தில் நம்பப்படகின்றது.
காரணம் காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த பிளாண்டில் இயற்கையான சூரிய ஒளி படுவது தான்.
தெற்கு மற்றும் தென்மேற்கு திசை
இந்த திசைகளில் மணி பிளாண்டை வைத்தால் எதிர்மறை ஆற்றலைக் கொண்டு வந்து செழிப்பின் ஓட்டத்தைத் தடுக்கின்றன என்று நம்பப்படுகிறது.
இந்த திசையில் மணி பிளாண்ட் வைத்தால் வீட்டில் ஒரு இணக்கமான மற்றும் நேர்மறையான சூழல் உருவாகும்.
இந்த செடிகள் நன்மை தரும் செடிகள் எனவே இதை ஒருங்காக பராமரிப்பது அவசியம்.
செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
