பப்பாளி பழத்தை யாரெல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா? மீறினால் உயிருக்கு ஆபத்து
உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், பானங்கள், நட்ஸ், விதைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
அதன் படி, உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்து மிக்க பழங்களில் பப்பாளியும் ஒன்றாகும். பப்பாளி பொதுவாகவே பலரும் விரும்பி சாப்பிடக் கூடிய பழம். இது இனிப்பு கொண்ட சுவை மிகுந்த பழம் மட்டுமன்றி பல நன்மைகளையும் உள்ளடக்கியது.
அதாவது நார்ச்சத்து, விட்டமின்கள், மினரல்கள் நிறைந்த பழம். குறிப்பாக இது அனைத்து பருவங்களிலும் கிடைக்கும் பழம் என்பதால் மக்கள் எப்போதும் இதை வாங்கி சாப்பிடலாம்.
அதிலும் பப்பாளியை முதலில் காலை அல்லது வெறும் வயிற்றில் சாப்பிடுவது பல்வேறு ஆரோக்கிய நலன்களைத் தருகிறது. ஆனால் குறிப்பிட்ட சிலர் இந்த பழத்தை சாப்பிட கூடாது. இதை பற்றிய முழு விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
பப்பாளி பழத்தை யாரெல்லாம் சாப்பிட கூடாது
சுவாசக் கோளாறு : சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தால், பப்பாளி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பப்பாளியில் காணப்படும் சில கூறுகள் சுவாசக் கோளாறுகளைத் தூண்டும். இந்த பழத்தை உட்கொள்வதால் சிலருக்கு ஒவ்வாமை பிரச்சனைகளும் ஏற்படக்கூடும்.
வயிற்று பிரச்சினைகள் : பப்பாளியில் காணப்படும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
ஆனால் நீங்கள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த பழத்தை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பப்பாளி சாப்பிடுவது வயிற்றுப்போக்கை அதிகடாக்கும்.
கர்ப்பிணி பெண்கள் : கர்ப்ப காலத்தில் பப்பாளி சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் ஒரு சுகாதார நிபுணரிடம் ஆலோசிக்காமல் பப்பாளி சாப்பிடக்கூடாது, இல்லையெனில் அவர்களின் உடல்நலம் மோசமாக பாதிக்கப்படும். அன்றாட உணவுத் திட்டத்தில் பப்பாளியைச் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |