வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் என்ன நடக்கும் தெரியுமா? இனி இந்த பிழையை செய்யாதீர்கள்
வாழைப்பழத்தில் பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச் சத்து, வைட்டமின் பி6, கால்சியம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றன. ஒரு வாழைப்பழத்தில் கிட்டதட்ட 25 சதவீதம் சர்க்கரைச் சத்தும் 30 சதவீதத்துக்கும் மேல் மாவுச்சத்தும் இருக்கின்றன.
அதோடு ஒரு மீடியம் சைஸ் வாழைப்பழத்தில் 89 கலோரிகள் இருக்கின்றன.
காலை உணவில் நிறைய பழங்கள் எடுக்கச் சொல்லி ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் ஆயுர்வேதம் காலையில் வெறும் வயிற்றில் எந்தவித பழங்களையும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்துகிறது.
வாழைப்பழத்தை காலை நேர உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

உடலுக்குப் போதிய ஆற்றலையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கக் கூடியது. ஆனால் வெறும் வயிற்றில் தனிளாக வாழைப்பழங்களை எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.
அதற்கு பதிலாக வேறு சில உணவுகளுடன் சேர்த்து வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளலாம்.
ஓட்ஸ், யோகர்ட், பால், பீநட் பட்டர் என வேறு உணவுகளுடன் சேர்த்து வாழைப்பழத்தை எடுக்க வேண்டும்.
அதேபோன்று வாழைப்பழம் சாப்பிடும் முன் வேறு ஏதாவது உணவைச் சாப்பிட வேண்டும்.
வாழைப்பழம் சாப்பிட்டால் ன்ஸ்டண்ட் எனர்ஜி கிடைக்கும் என்பது உண்மை தான்.
ஆனால் அந்த புத்துணர்ச்சியும் ஆற்றலும் தற்காலிகமானது தான். அதில் உள்ள மாவுச்சத்து உங்களுக்கு உடனடி ஆற்றலைக் கொடுத்தாலும் அதிலுள்ள அதிகப்படியான சர்க்கரை அடுத்த மணி நேரங்களில் உங்களுடைய உடலிலுள்ள எனர்ஜியை உறிஞ்சி எடுத்து விடும்.
எனவே வாழைப்பழத்தினை சாப்பிடும் போது வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டாம்.