இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது? அதற்கான காரணமும் அறிவியல் விளக்கமும் இதோ
இரவில் நகம் வெட்டக்கூடாது என்று கூறுவதற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பெரியவர்கள், வீட்டில் உள்ள சிறு பிள்ளைகளுக்கு சொல்லும் அறிவுரைகளில் ஒன்று, இரவில் நகம் வெட்டக்கூடாது என்பது. இதனை பலர் மூட நம்பிக்கை என்று கூறினாலும், இதற்கு பின்னால் அறிவியல் காரணமும் உள்ளது.
ஏன் இரவில் நகம் வெட்டக்கூடாது?
பாரம்பரிய முறைப்படி பார்க்கும் போது, இரவு என்பது எதிர்மறை ஆற்றல்கள் அதிகமாக இருக்கும் வேளையாக கருதப்படுகிறது. இதனால், இந்த நேரத்தில் நகம் வெட்டுவதால் சில தேவையற்ற எதிர்மறை ஆற்றல் நம்மை தாக்கும் என்று கூறப்படுகின்றது.
அது மட்டுமல்ல, இந்த நேரத்தில் நிலவின் ஆற்றலும் அதிகமாக இருக்குமாம். இந்த நேரத்தில் நகம் வெட்டுவதால், இந்த சக்திகளை நாம் ஈர்க்கக்கூடும் என்பதாலும் இரவில் நகம் வெட்டக்கூடாது என்று சிலர் கூறுகின்றனர்.
ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரையில், இரவில் நகம் வெட்டினால் உடலில் உள்ள சமநிலைகள் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இப்போது இருப்பது போல, நவீன வசதிகள் அப்போது இல்லை. இதனால் மின்சாரமும் கிடையாது. அந்த காலத்தில் லைட்டும் இருக்காது.
எனவே, இரவில் குறுகிய வெளிச்சத்தில் நகத்தை வெட்டினால் தவறுதலாக நாம் சாப்பிடும் உணவில் நகம் விழுந்துவிடக்கூடும். இதனாலும் இரவில் நகத்தை வெட்டக்கூடாது என்று பலர் கூறிவந்தனர்.
அவர்களின் இந்த பகுத்தறிவான சிந்தனைதான், நாளடைவில் வேறு சிலரால் மூட நம்பிக்கையாக மாறியதாக கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |