இத்தனை நாள் இந்தப் பொருட்களை எல்லாம் ப்ரிட்ஜில் வைத்தீர்களா? இனிமேல் வைக்காதீர்கள்
பொதுவாகவே தற்போது எல்லோரது வீட்டிலும் தற்போது குளிர்சாத பெட்டி இல்லாமல் இருக்காது. சமைத்த உணவுகளில் இருந்து காய்கறி வரைக்கும் உணவை பழுதாகாமல் வைக்க தினமும் இந்த குளிர்சாதன பெட்டியை பயன்படுத்துகிறோம்.
அதிலும் காலையில் சமைத்த உணவுகளை இரவு வரைக்கும் பழுதாகாமல் வைத்திருக்கிறது. ஆனால் ஒரு சிலப் பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாதாம் அது என்னென்ன தெரியுமா?
குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாதவை
வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும். எனவே வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
காய்கறி, தேங்காய், ஆலிவ் அல்லது வேறு வகையான சமையல் எண்ணெய் எதுவாக இருந்தாலும், குளிர்சாதன பெட்டியில் வைத்தால் அது விரைவாக கெட்டியாகும்.
சமைத்த கோழியை 2 முதல் 3 நாட்களுக்கு மேல் குளிர்சாதன பெட்டியில் அவை கெட்டுவிடும். குளிர்ந்த வெப்பநிலையில் சேமித்து வைப்பதால், அதன் தன்மையும், சுவையும் கெட்டுவிடும்.
எண்ணெயைப் போலவே, தேனும் நீண்ட ஆயுளைக் கொண்டுள்ளது குளிர்சாதனப்பெட்டியில் தேனை சேமித்து வைப்பது அதை படிகமாக்குகிறது.
பச்சை மாம்பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது, ஏனெனில் குளிர்ச்சியானது பழுக்க வைக்கும். இது மாம்பழங்களை கடினமாக்குகிறது.
தக்காளியை நாம் பிரிட்ஜில் வைத்தால் அதன் சுவை மாறுபடும் மற்றும் அதன் தரமும் குறைந்துவிடும்.
முலாம்பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால், முலாம் பழத்தில் இருக்கும் சில சத்துக்களை பழம் இழந்து விடுகிறது.
மூலிகைகளையும் கீரைகளையும் ஃபிரிட்ஜில் வைத்து வீணடிக்கக் கூடாது, ஏனென்றால், அவற்றின் சத்துகள் குறைந்துபோய்விடும்.
பூண்டை திறந்தவெளியில் வைத்திருப்பது நல்லது. மாறாக குளிர்சாதன பெட்டியில் வைத்தால் பூண்டின் சுவை கெட்டு விடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |