48 பூர்த்தியானவரா நீங்க! இந்த விஷயங்களை கடைபிடிப்பது அவசியம்
உடலில் ஆரோக்கிம் பாதிக்கப்படுகிறது என்றால் அதில் நமது உணவின் மூலமாகவும் தான். வாழ்க்கையில் உணவு பழக்கம், உடற்பயிற்சி, சரியான தூக்கம் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது போன்ற பல விடயங்களை நாம் சரிவர கவனித்தால் உடல் அரொக்கியமாக இருப்பதில் இது உதவி செய்யும்.
இதில் மற்றைய நபர்களை விட 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் அவர்களின் ஆரோக்கியத்தில் சில விடயங்களை கவனிக்க வேண்டும். அது எப்படியான விடங்கள் எதை கடைபிடிக்க வேண்டும் என்பதை இற்த பதிவில் பார்க்கலாம்.
இதுபோன்ற விடயங்களை கடைபிடிப்பதால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். நோய் நொடி இன்றியும் வாழ முடியும் அவை என்ன என்பது பார்க்கலாம்.
48 வயதிற்கு அதிகமானோர்
நீங்கள் தேனீர் குடிப்பவராக இருந்தால் அந்த தேனீரில் குறைவான பால் சேர்க்க வேண்டும். பால் சேர்ப்பதை விட எலுமிச்சை சாறு கல்ந்து குடித்தால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. காலை அல்லது பகலில் இரண்டு முறைக்கு மேல் காபி எடுத்துக் கொள்வது உடலை பாதிக்கும்.
பகல் வேளையில் அதிகமாக தண்ணீர் குடிக்கலாம் ஆனால் மாலை 6 மணிக்கு பின் தண்ணீர் அருந்துவதை குறைத்துக் கொள்வது நல்லது. அதிகமாக எண்ணெய்யில் பொரித்த உணவுகளை உண்ண கூடாது. இதற்கு காரணம் பொரித்த உணவில் அதிக கொலஸ்ரால் இருக்க கூடும்.
சமைக்கும் போது குறைவான எண்ணையை பயன்படுத்தி சமைப்பது நல்லது. இதை தவிர பச்சை உணவுகளை அதிகமாக எடுத்து கொள்ளலாம். மாலை 5 அல்லது 6 மணிக்கு பின்னர் உறங்குவது நல்லது. இரவில் 10 மணி முதல் காலை 6 மணி வரை ஆழ்ந்த தூக்கம் உடலுக்கு அவசியம்.
குறைந்தது 8 மணி நேரம் முதல் குறைந்தபட்சமாக 7 மணி நேரம் வரை தூங்குவது அவசியம். வயதாகிவிட்டால் நடது உடல் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். எனவே சூடான நீரை உப்யோகிப்பது நல்லது.
45 வயதுக்கு பிறகு குளிர்ந்த நீர் குடிப்பதை குறைத்து கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. இதற்கு பதிலாக மிதமான சூடுள்ள நீர் அல்லது சாதாரண நீரை குடிக்கலாம். எப்போதும் குளிர்ச்சியான தண்ணீரில் மாத்திரை எடுத்துக் கொள்ளக்கூடாது.
தூங்க செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு மாத்திரை மருந்துகளை உட்கொள்ள வேண்டும். மாத்திரை சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது. தினசரி உணவில் உப்பு, சர்க்கரை ஆகியவற்றின் அளவை குறைத்துக் கொள்ளுதல் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி, உணவுகளை தவிர்க்க வேண்டும். மாவுச்சத்துள்ள கிழங்கு வகைகள், உணவுகளை குறைக்க வேண்டும். பால் பொருள்கள் சாப்பிடுவது குறைத்துக் கொள்ளலாம். இப்படி வாழ்க்கைமுறையில் சிறிய சிறிய மாற்றங்களை கொண்டு வருவது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

leptospirosis symptoms: மனித குலத்துக்கு எமனாகும் பாக்டீரியா! லெப்டோஸ்பைரோசிஸ் அறிகுறிகள் எப்படியிருக்கும்?
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |