இந்த பிரச்சனைகள் உடலில் இருந்தால் ஆரஞ்சுப்பழம் சாப்பிடலாமா?
ஆரஞ்சுப்பழம் ஒரு நல்ல வைட்டமின் நிறைந்த பழமாகும். இநத பழத்தில் கிட்டதட்ட 80 சதவீதத்துக்கும் மேல் நீர்ச்சத்தும் அதிக நார்ச்சத்தும் இருக்கிறது. இதனால் நோய் தொற்றுக்கள் அண்டாது.
ஆரஞ்சுப்பழம்
இந்த பழங்களை அதிகமாக சாப்பிட கூடாது. அப்படி சாப்பிட்டால் இதில் வரக்கூடிய அதிக அமிலத்தன்மையின் காரணமாக சிலருக்கு நெஞ்செரிச்சலை ஏற்படுத்தலாம்.
எனவே இந்த பழங்களை நெஞ்செரிச்சல், அசிடிட்டி பிரச்சினை உள்ளவர்கள் சாப்பிட கூடாது.
இன்ஃபிளமேஷன்களால் மூட்டுகளுக்கு இடையே உள்ள தசைநார்கள் மற்றும் திசுக்கள் பாதிப்படைந்து இருக்கும் போது ஆரஞ்சு பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், இல்லாவிட்டால் வலி அதிகரிக்கும்.
சாப்பிடும்போது குடலில் அமிலச் சுரப்பு அதிகரித்து கடுமையான வயிற்று வலி, அஜீரணக் கோளாறு, இரைப்பையில் அமில உற்பத்தி (ஆசிட் ரிஃப்ளக்ஸ்) உள்ளிட்ட பிரச்சினைகளை கொண்டு வந்து சேர்க்கும்.
சிறுநீரகக் கற்கள் உள்ளிட்ட பிரச்சினை இருப்பவர்களும் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இல்லையென்றால் இது வலியை மேலும் கடுமையாக்கும். சிறுநீர்ப் பாதையில் எரிச்சலையும் உண்டாக்கலாம்.
அதாவது சொத்தை பல், ஈறுகள் தொடர்பான பிரச்சினை, ஈறு வீக்கம், ரத்தம் வடிதல், பல் கூச்சம் போன்ற பிரச்சினை இருப்பவர்கள் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதைத் தவிர்த்தல் நல்லது.
பல் கூச்சம் உள்ளவர்களுக்கு இதிலுள்ள அமிலத் தன்மையால் கூச்சம் அதிகமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |