இது தெரியாம போச்சே... கரும்பு ஜூஸை யாரெல்லாம் குடிக்க கூடாது தெரியுமா?
கரும்பு ஜூஸில் எண்ணற்ற ஆரோக்கிய பயன்கள் கொட்டி கிடந்தாலும் சில நோய்கள் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த கரும்பு ஜீஸை குடிக்க கூடாது எனப்படுகின்றது.
கரும்பு ஜூஸ்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிக்கும் ஒரு ஜூஸ் என்றால் அது கரும் ஜூஸ் தான்.
கரும்பில் கார்போஹைட்ரேட், மினரல்ஸ், ப்ரோட்டீன்ஸ், இரும்பு, ஜிங்க், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்ஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
கரும்பு ஜூஸ் உடனடி ஆற்றல் அளிக்கிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது, சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மேலும், இதில் உள்ள வைட்டமின் சி தொண்டை மற்றும் வயிற்றுப் புண்களைக் குணப்படுத்த உதவுகிறது. இது தவிர எலும்புகளை வலுப்படுத்துகிறது.
இத்தனை பயன்கள் கரும்பு ஜூஸில் இருந்தாலும் அதை ஒரு சில பிரச்சனைகள் இருப்பவர்கள் குடிக்க கூடாது எனப்படுகின்றது.
யாரெல்லாம் குடிக்க கூடாது?
உங்களுக்கு ஏற்கனவே அதிக கொழுப்பு இருந்தால், அதாவது கொலஸ்ரால் இருந்தால் கரும்பு சாறு குடிக்காதீர்கள்.
காரணம் அதிக கொழுப்பு இருப்பதால் உங்கள் இதயத்திற்கு ஒரு பிரச்சனையை ஏற்படுத்தலாம். எனவே கொலஸ்ரால் பிரச்சனை உள்ளவர்கள் கரும்பு சாறு குடிப்பதை தவிருங்கள்.
எடல் எடை குறைக்க நீங்கள் ஒரு டயட்டைப் பின்பற்றினால் அந்த நேரத்தில் கரும்பு சாறு எடுத்துக்கொள்ளாதீர்கள். மீறி எடுத்துக்கொண்டால் நீங்கள் எடை குறைக்க டயட் இருப்பதற்கு கரும்பு சாறு ஒரு தடையாக இருக்கலாம்.
கரும்பு சாறில் இதில் நிறைய கலோரிகள் மற்றும் சர்க்கரை உள்ளது. இது எடை அதிகரிக்க வழிவகுக்கும்.

கரும்புச் சாற்றில் இயற்கையான சர்க்கரைகள் நிறைந்துள்ளன. எனவே உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், கரும்பு சாறு குடிக்காதீர்கள். இது இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கும்.
எனவே, நீரிழிவு நோயாளிகள் அதைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
கரும்புச் சாற்றில் சில நேரம் பாக்டீரியா மற்றும் அசுத்தங்கள் இருக்கலாம், இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |