குட்டை வால் மலைப்பாம்பை குளிப்பாட்டி பூ வைத்துவிட்ட நபர்... வைரலாகும் காணொளி
நபரொருவர் குட்டை வால் மலைப்பாம்பை குளிப்பாட்டி அதற்கு அழகாக பூ வைத்துவிடும் வியக்க வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குட்டை வால் மலைப்பாம்பு என்பது பைதான் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை பாம்பு இனம் ஆகும். குறிப்பாக போர்னியோ மலைப்பாம்பு (Python breitensteini) மற்றும் மியான்மர் குட்டை வால் மலைப்பாம்பு (Python kyaiktiyo) ஆகியவை குட்டை வால் மலைப்பாம்பு என அறியப்படுகின்றது.
இந்த பாம்புகள் பொதுவாக குட்டையான வால் மற்றும் பருத்த உடலைக் கொண்டிருக்கும். மரக்கட்டைகளின் அடிப்பகுதி, எலி வலைகள் மற்றும் இலை சருகுகளின் கீழ் வசிக்கும் இயல்புடையவை.
இந்த வகை மலைப்பாம்புகளை சில செல்லபிராணியாகவும் வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் நபரொருவர் தனது செல்லபிரபாணியான குட்டை வால் மலைப்பாம்பை குளிப்பாட்டி பூ வைத்துவிடும் காணொளி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
