விஜய்யின் அரசியல் பயணம் குறித்து சர்ச்சையை கிளப்பிய பிரபலம்! விமர்சகர்களிடம் வசமாக சிக்கிய தகவல்
இளைய தளபதி விஜய்யின் அரசியல் பயணம் குறித்து அவரின் தாயார் தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.
அடுத்த சூப்பர் ஸ்டாராகும் விஜய்
தமிழ் சினிமாவில் தற்போது சூப்பர் ஸ்டாருக்கு இணையாக வலம் வரும் நடிகர்களில் விஜய் முதல் இடத்தை பிடித்து வருகிறார்.
இவரின் யதார்த்தமான நடிப்பால் உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களை தனவசப்படுத்தி வைத்திருக்கிறார்.
இந்நிலையில் தற்போது பிரபல இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகும் “வாரிசு” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இந்த திரைப்படம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தலும் திரைப்படம் கோலாகலமாக பொங்கல் பண்டிகை தினத்தன்று வெளியாகவுள்ளது.
கோவிலில் விமர்சகர்களிடம் சிக்கிய பிரபலத்தின் தாயார்
தொடர்ந்து இது குறித்து பல இடங்கள் விஜயின் தாயாரான திருமதி ஷோபா சந்திரசேகர் கருத்து வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் வாரிசு திரைப்படம் வெற்றிப் பெற வேண்டும் என்று காஞ்சிபுரம், காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி தரிசனம் பெறுவதற்காக சென்றுள்ளார்.
இதன் போது ஊடகவியலாளர்கள் இவரிடம் விஜய் தொடர்பில் சில கேள்வி கேட்டுள்ளனர்.
அரசியலுக்கு வருவாரா?
அதில், “விஜய் அரசியலுக்கு வருவாரா என கேள்வியெழுப்பியுள்ளனர். அதற்கு, “எல்லாம் விஜயின் முடிவுதான் என்றும், நானும், அவரது தந்தை எஸ்.ஏ.சி.யும் எந்த விஷயத்துலயும் தலையிடுவதில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த விஜயின் ரசிகர்கள் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்ற பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.