11 ஆண்டு காலமாக வலியால் துடிக்கிறேன்! மருத்துவமனையில் இருந்து கதறியபடி வீடியோவை வெளியிட்ட முன்னாள் வீரர்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷோயப் அக்தர் மருத்துவமனையில் இருந்து வெளியிட்டு இருக்கும் கோரிக்கை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
2000 காலகட்டங்களில் கிரிக்கெட் மைதானத்தில் பேட்டிங் ஜாம்பவான்களை நடுநடுங்க வைக்கும் வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்தவர் ஷோயப் அக்தர்.
வேகப்பந்து ஜம்பவான்
இவரின் வேகத்துக்கு பேட்ஸ்மேன்களை கொலை நடுங்க வைத்தவர். தற்போது, கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற முதல் கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான முழங்கால் வலியால் வேதனை அடைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
எனவே பல ஆண்டுகளாக முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்த அவருக்கு ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் அறுவை சிகிச்சை நடந்தது.
அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் அவர் தான் விரைவில் குணமடைய வேண்டும் தனது ரசிகர்கள் தனக்காக இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

முழங்கால் வலி
இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், “நான் இன்னும் 4-5 ஆண்டுகள் கூடுதலாக பாகிஸ்தானுக்கு ஆடியிருந்தால் நான் சக்கர நாற்காலியில் வாழ்நாள் பூராவும் அமர வேண்டிய துர்பாக்கியசாலியாகியிருப்பேன்.
இதனால் தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றேன். ஆனாலும் கடந்த 11 ஆண்டுகளாக வலியில் இருந்து வருகிறேன். ஓய்வு பெற்ற பிறகும் முழங்கால் வலி பயங்கரமாக இருக்கிறது.

உருக்கம்
இதுதான் வேகப்பந்து வீச்சுக்கு நாம் கொடுக்கும் விலை ஆனால் அதுவுமே பாகிஸ்தானுக்காகச் செய்வது மதிப்பு மிக்கதுதான். வேகமாக வீசுவதன் பலன் எலும்புகளை இழந்து விடுவோம்.
ஆனால், மீண்டும் பாகிஸ்தானுக்காக எலும்புகளை இழந்தாலும் பரவாயில்லை என்றே தோன்றுகிறது.
மேலும், ரசிகர்கள் தனக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்” என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.