ஊழியருடன் ரகசிய உறவு... 9வது குழந்தைக்கு தந்தையான எலான் மஸ்க் பற்றிய அதிர்ச்சி தகவல்!
உலகின் பணக்காரரான எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்ற பெண்ணுடன் உறவில் இருந்து இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ள தகவல் தீயாய் பரவி வருகிறது.
இந்த தகவல், கடந்த ஏப்ரல் மாதத்தில், எலான் மஸ்க் மற்றும் சிலிஸ் ஆகிய இருவரும் தங்களின் இரட்டை குழந்தைகளின் பெயர் வைக்கும் போது தான் அதன் ஆவணங்கள் மூலம் இந்த செய்தி உறுதியாகியுள்ளது.

ஊழியருடன் தொடர்பு?
இந்த தம்பதியினருக்கு கடந்த நவம்பர் மாதம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இதன் மூலம் எலான் மஸ்க்கிற்கு மொத்தம் 9 குழந்தைகள் உள்ளன.
மேலும், ஷிவோன் சிலிஸ் கனடாவின் ஒன்டாரியோவில் பிறந்தவர். 36 வயதான அவர் எலான் மஸ்க்கை முதன்முதலில் 2015இல் சந்தித்தார்.

பின் 2017ஆம் ஆண்டு மே மாதம் வேலைக்குச் சேர்ந்துள்ளார். டெஸ்லாவின் செயற்கை நுண்ணறிவு பிரிவின் திட்ட இயக்குனராக பணியாற்றிய ஷிவோன் சிலிஸ், 2019ஆண் ஆண்டில் நியூராலிங்கில் சேர்ந்துள்ளார்.
அதன் பின் டுவிட்டர் நிறுவனத்துடன் எலான் மஸ்க்கின் ஒப்பந்தம் நிறைவடைந்த பின், டுவிட்டர் நிறுவனத்தை ஷிவோன் முன்னின்று நடத்துவார் எனக் கூறப்படுகிறது.