ஆண்மை பிரச்சினை இருப்பவர்கள் இந்த விதை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு ஐவிரலி விதை மிக முக்கியமான மூலிகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பாலுணர்வை தூண்டுவது முதல் மலச்சிக்கல், நீரிழிவு, காய்ச்சல், புற்றுநோய் கட்டிகள் போன்ற ஏராளமான பிரச்சினை சரிசெய்ய இந்த ஐவிரல் மூலிகை பயன்படுத்தப்படுகிறது.
இதனை யாரெல்லாம் எடுத்து கொண்டால் நன்மைகள் அதிகம் என்று பார்க்கலாம்.
கருத்தரிக்க உதவும் - பெண்களுக்கு பொதுவாக இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று முறையற்ற மாதவிடாய் பிரச்சினை. இந்த பிரச்சினையை சரிசெய்து மாதவிடாயை ஒழுங்குபடுத்தி, விரைவில் கருத்தரிக்க ஆயுர்வேதத்தில் வெல்லம், துளசி ஆகியவற்றுடன் சேர்த்து மருந்தாக செய்து கொடுப்பார்கள்.
ஆனால் கர்ப்பமாக இருக்கும்போது பெண்கள் இந்த விதையை சாப்பிட கூடாது. ஏனெனில் இது கருக்கலைப்பை உண்டாக்கும்.
ஆண்மை குறைபாட்டை போக்கும் - ஐவிரலி பெண்களின் கருவளத்தை மட்டுமல்லாது ஆண்களின் கருவளையத்தையும் மேம்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இது ஆண்களுக்கு உண்டாகும் ஆண்மைக் குறைபாட்டை சரிசெய்து பாலுணர்வை தூண்டக்கூடிய தன்மையை கொண்டிருக்கிறது.
இதில் எத்தனால் பண்புகள் அதிகம் இருக்கின்றன என்றும் அவை விந்தணு எண்ணிககையை அதிகரிக்கச் செய்வதோடு, டெஸ்டோஸ்டெரோன் அளவை கணிசமாக அதிகரிக்கச் செய்வதாக சொல்லப்படுகிறது.
ஐவிரலி விதை எடுத்துக் கொள்ளும் முறை
ஐவிரலி விதைகள் முழுதாகவும் பொடியின் வடிவிலும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
இதை வாங்கி அப்படியே நீரில் கலந்து பயன்படுத்தலாம். ஐவிரலி இலையின் பொடி அல்லது இலையை அரைத்து பேஸ்ட் போல ஆக்கி சரும அழற்சி போன்ற பிரச்சினைகளுக்கு பயன்படுத்தலாம்.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் ஐவிரலி பொடியை பாலில் கலந்து ஒரு நாளைக்கு ஒரு முறை குடிக்கலாம்.
1-2 கிராம் அளவுக்கு மேல் எடுக்கக் கூடாது.
அதேபோல சாப்பிட்டு 2-3 மணி நேரங்களுக்குப் பிறகு தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.