கையடுத்து கும்பிடும் அழகில் நடிகை ஷிவானி: புகைப்படத்தால் பாடாய் படும் ரசிகர்கள்
பிக்பாஸ் ஷிவானி புடவை கட்டி சிரித்த முகத்துடன் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் வைரலாகி வருகின்றது.
எப்பொழுது மாடர்ன் உடையில் கவர்ச்சியாக வலம்வரும் ஷிவானி, நேற்று விநாயகர் சதுர்த்தி என்பதால் புடவை அணிந்து மகாலட்சுமி போன்று காணப்படுகின்றார்.
பிக்பாஸ் மூலம் பிரபலமான இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் என்று கூறலாம்.
சினிமாவில் அடியெடுத்து வைக்க நல்ல கருத்துள்ள படத்திற்கு காத்திருந்த இவருக்கு முதல் படமே ஜாக்பாட் அடித்துள்ளது. ஆம் தனது முதல் படத்திலேயே விஜய் சேதுபதியுடன் நடிப்பதுடன், சில நடிகர்களின் படத்தில் நடிப்பதற்கும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.
இது ஒரு புறம் இருக்க, நேற்றைய விநாயகர் சதுர்த்தி தினத்தை மிகவும் குதூகலமாக கொண்டாடியுள்ளார் ஷிவானி. இந்த புகைப்படம் ரசிகர்களால் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பிங்க் நிற பட்டு சேலையில், பார்த்தாலே கை எடுத்து கும்பிட தோன்றும் மகாலக்ஷ்மி போல் முகம் நிறைய புன்னகையோடு போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.