என்னோட பீஸ்ட் இதான்.. சொகுசு கார் வாங்கிய பிக்பாஸ் ஷிவானிக்கு குவியும் வாழ்த்துக்கள்!
பகல் நிலவு என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார்.
இதனிடையே, பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற ஷிவானி மீது ஒரு வித எதிர்பார்ப்பு இருந்தது. இறுதி வாரம் வரை பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தார்.
ஆனால், பாலாஜி முருகதாஸ் மீது காதல் வயப்பட்டதால், அனைவரும் திட்டி தீர்த்தனர். இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
தற்போது, புதிதாக பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ் காரை வாங்கியிருப்பதாக, புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார் ஷிவானி.
அதற்கு ரம்யா பாண்டியன் தனது வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். கூடவே ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை ஷிவானிக்கு தெரிவித்து வருகிறார்கள்.