பாத்ரூமில் உட்கார்ந்து தேம்பி தேம்பி அழுத சிவாங்கி! யார் காரணம்? அம்மாவே பகிர்ந்த தகவல்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அறிமுகமானாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக அனைவரும் மனதிலும் இடம்பிடித்தவர் சிவாங்கி.
அண்ணன்- தங்கையாக புகழும்- சிவாங்கியும் அடிக்கும் லூட்டிகள் ஏராளம், 2வது சீசன் முடிவடைந்து தற்போது 3வது சீசனிலும் அசத்தி வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் சினிமா பாடல்கள், திரைப்படங்கள் என படு பிஸியாக வலம் வரும் சிவாங்கியின் வாழ்வில் ஏதோ சோகம் நடந்துவிட்டது போல.
சமீபகாலமாகவே அவரது ஸ்டேட்டஸ்கள் இதை காட்டிக் கொடுத்து விடுகின்றன, கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “நீங்கள் தனிமையில் இருக்கிறீர்கள் என்பதற்காக டாக்ஸிக் மனிதர்களுடன் மீண்டும் போய் பழகாதீர்கள் . தாகமாக இருக்கிறது என்பதற்காக விஷத்தை குடிக்க முடியாதல்லவா “ என்ற வரிகளை பகிர்ந்திருந்தார்.
இதேபோலத்தான் சில நாட்களுக்கு முன்பு, ” சிலர் உங்களை பயன்படுத்த மாட்டேன் என சொல்லி சொல்லி உங்களை கடைசியாக முழுவதும் பயன்படுத்தி காகிதம் போல தூக்கி போடுவார்கள் “ என குறிப்பிட்டிருந்தார்.
இதே போலகடந்த 2020 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் ” நீங்க இந்த வருடம் என்ன விஷயத்தை கற்றுக்கொண்டீர்கள் ?” என்ற கேள்விக்கு சிவாங்கி , யாரையும் கண் மூடி தனமாக நம்பக்கூடாது என்பதைத்தான் என பதில் கொடுத்திருந்தார்.
சிவாங்கிக்கு என்ன தான் ஆனது? ஏன் இப்படி சொல்கிறார் என பலரும் குழம்பி போயிருக்கும் நிலையில், அவரது தாய் பின்னி கிருஷ்ணன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சிவாங்கி எந்த கஷ்டத்தையும் எங்களிடம் சொல்ல மாட்டாள்.
சமீபத்தில் யாரோ புண்படும்படி பேசிவிட்டார்கள் போல, பாத்ரூமில் உட்கார்ந்து அழுததாக கூறினாள், என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை.
அவள் எல்லாவற்றையும் என்னிடம் கூறவேண்டும் என்பதே எனது ஆசை என தெரிவித்துள்ளார்.