ஈழத்தில் அகழ்வு பணியின் போது வெளிவந்த சிவலிங்கம்! கடும் குழப்பத்தில் ஆராச்சியாளர்கள்? தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள்
இலங்கையில் முல்லைத்தீீவு மாவட்டத்தில் உள்ள குருந்தூர் என்ற மலை பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நேற்று முன்தினம் அங்கிருந்து சிவலிங்கத்தை ஒத்த தொல்லியல் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன. குருந்தூர்மலையில் புராதன விகாரையின் சிதைவுகள் இருப்பதாக தெரிவித்து கடந்த 18ஆம் திகதி முதல் தொல்லியல் ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அகழ்வாராய்ச்சி பணிகளில் ஈடுப்படும் போது இந்த சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன. எனினும், இந்த சிதைவுகள் தொடர்பில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் இதுவரையில் எந்தவிதமான உத்தியோகபூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை.
இதேவேளை, குறித்த சிதைவு பல்லவர் காலத்தில் உள்ள சிவ லிக்கம் என்று ஒரு சிலரும் அனுராத புர காலத்திற்குரியது என்று ஒரு சிலரும் கூறி வரும் நிலையில் இது இலங்கையர்கள் மத்தியில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


