அட.. குக் வித் கோமாளி ஷிவாங்கியையும் விட்டு வைக்காத அஜித் ரசிகர்கள்; அவர் அளித்த பதிலை பாருங்க.. வைரல் வீடியோ
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஷிவாங்கி. இவர் செய்யும் குறும்புத்தனம் அனைவரையுமே ரசிக்க வைக்கும். இந்நிலையில், சமீப நாட்களாக வலிமை படத்திற்கான அப்டேட்டிற்காக தல ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும், ரசிகர்கள் படக்குழு துவங்கி இந்திய பிரதமர் வரை வலிமை அப்டேட் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை கண்டு அதிருப்தியடைந்த நடிகர் அஜித், சிலரது செயல்கள் தன்னை வருத்தமடைய செய்வதாகவும், மேலும் அறிவித்தபடி படம் குறித்த தகவல்கள் உரிய நேரத்தில் வரும்.
அதுவரை பொறுமையாக காத்திருங்கள் எனவும் அறிக்கை வாயிலாக ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார். இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கியிடம் ரசிகர் ஒருவர் வலிமை குறித்த அப்டேட் கேட்க, அவர் தனது பாணியில் சிரித்தவாறே எனக்கு அதெல்லாம் தெரியாதுங்க, ஒருவேளை எனக்கு தெரிந்தால் நான் சொல்கிறேன் என்று பதிலளித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.