சோழர்களின் பெருமை காக்கும் சிவன் கோயில் பற்றி தெரியுமா?
தமிழர்களின் கலைப்படைப்பை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் படைப்புக்களில் ஒன்றான நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரம் கோவில் பற்றிய தகவல்களை இந்த படைப்பு உங்கள் முன் கொண்டுவருகிறது.
இந்த கோயிலைக் கட்டிய சோழர்களின் சிறப்புக்கள், இதன் தனித்துவமான பண்புகள், மற்றும் தற்போதைய நிலைப்பாடு குறித்து தெரிந்துக் கொள்வோம்.
நார்த்தாமலையின் வரலாறு
இந்த மலை முதலாம் இராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் (கி.பி 985-1014), 'தெலுங்குக் குல காலபுரம்' என்ற மன்னால் கட்டப்பட்டுள்ளது. முதலாம் இராஜராஜனின் பட்டபெயரை அடிப்படையாகக் கொண்டு இந்த மலைக்கு நார்த்தாமலை என பெயர் சூட்டப்பட்டதாக வரலாறு சான்றுகள் கூறுகிறது.
இதனை தொடர்ந்து நார்த்தாமலை சோழர்களின் கடைசி அரசனான மூன்றாம் இராஜேந்திரன் காலம் தொட்டு சோழர்களின் ஆட்சிக்கு அடுத்தபடியான பாண்டியர்கள் கட்டுப்பாட்டின் கீழ் நிர்வகிக்கப்பட்டுள்ளது.

அமைவிடம்
இவ்வளவு சிறப்பு பொருந்திய நார்த்தாமலை, திருச்சிராப்பள்ளி - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் திருச்சிராப்பள்ளியிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவிலும் புதுக்கோட்டையிலிருந்து பார்த்தோமானால் 17 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

கட்டுமானங்கள்
தஞ்சை பெரிய கோவில் கட்டுமானத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்ட சிற்பங்கள் அனைத்தும் இப்பகுதியில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட கற்களைக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கலாம் என கிராமவாசிகளிடையே நம்பப்படுகிறது.
இதுபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தின் ஏனைய அம்மன் கோவில்களுக்கும் கற்கள் இங்கிருந்தே எடுக்கப்பட்டுள்ளதாக சான்றுகள் தெரிவிக்கின்றன.

சிறப்புக்கள்
1. நார்த்தாமலை குன்றுக் கூட்டம்
நார்த்தாமலையில் மொத்தமாக ஒன்பது குன்றுகள் காணப்படுகிறது. அவையாவன மேல மலை, கோட்டை மலை, கடம்பர் மலை, பறையன் மலை, உவச்சன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மை மலை, மண் மலை, மற்றும் பொன்மலை எனும் பெயர்களால் அழைக்கப்படுகிறது.

2. சமணர் குடகு குன்று
நீண்டு செல்லும் போது முக்கால் பங்கு உயரத்தில் விஜயாலய சோழீஸ்வரம் கோயில் உட்பட மொத்தமாக ஆறு சிறு கோயில்களின் கட்டுமானங்கள் உள்ளன.
இதில் உள்ள பிரதானக் கோயில்களுக்கு இடையில் இருக்கும் நந்திக்குப் பின்னால் இரு குடைவரை கோயில்கள் உள்ளன. இதுதான் இந்த சிறப்பையும் தமிழர்களின் கலைப்படைப்பை எடுத்துக் காட்டுகிறது.
இதன் உட்பகுதியில் முதலாவது சமணர் குடகு அல்லது பதினெண்பூமி விண்ணகரம் என்று அழைக்கப்படும் பெரிய குகை உள்ளது.
இந்த குகைகள் ஏழாம் நூற்றாண்டுகளில் சமணர் குகையாக இருந்தது, இதன் முற்பகுதியில் அர்த்த மண்டபத்தில் 12 ஆளுயர விஷ்ணு சிலைகள் உள்ளதால் இந்த குடைவரை விஷ்ணு கோயிலாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும் இந்த மண்டபத்திற்கு முன்னுள்ள மேடையின் பீடத்தில் யாளி, யானை, சிங்கம் உள்ளிட்ட உருவங்களை வரிசையாகக் கொண்ட சிற்பத்தொகுதி உள்ளது.

3. விஜயாலய சோழீஸ்வரம்
மேல மலை மீது இருக்கும் கோயில்களில் பிரதான கோயிலாக விஜயாலய சோழீஸ்வரம் என்ற கோவில் பார்க்கப்படுகிறது. இக்கோவிலின் வெளிப்புறச் சுவரில் காணப்படும் கல்வெட்டுக்கள் கோவிலிக் வரலாற்றை சுருக்கமாக கூறும் மூலாதாரங்களாக கருதலாம்.
இதில் காணப்படும் ஆதாரங்களை வைத்து சாத்தன் பூதி என்பவரால் கட்டப்பட்டதாகவும், மழையினால் இது இடிந்துவிடவே, மல்லன் விடுமன் என்பவரால் இதை விஜயாலய சோழன் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் என்றும் அறியப்படுகிறது.
விஜயாலயன் காலம் முதல் இக்கோவில் விஜயாலய சோழீஸ்வரம் என்று வழங்கப்பட்டு வந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
அந்த வகையில் இந்த கோவிலின் சிறப்பையும் வரவாற்று சான்றுகளையும் இன்னும் தெளிவாக தெரிந்துக் கொள்ள கீழுள்ள வீடியோவை பார்க்கவும்.