வெயில் காலத்தில் தோலில் வரும் அக்கி நோய் - டாக்டர் கார்த்திகேயன் விளக்கம்
தற்போது அதிகரித்து வரும் வெப்பத்தால் தோல் நோய்களின் தீவிரம் அதிகமாக இருக்கும்.

வெயில்கால நோய்
பருவகால மாற்றம் வந்துகொண்டே தான் இருக்கும். அந்த பருவத்தில் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையாதவாறு நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இது மிகவும் முக்கியம். கோடை வெயிலில் நமது உடல் அதிக தோல் நோய்களை எதிர்கொள்ளும். வெயில் காலங்களில் நமது உடலை நீரேற்றமாகவும் சுத்தமாகவும் வைத்திருப்பது அவசியம்.
அந்த வகையில் வெயிலின் தாக்கத்தால் தோலில் அக்கி எனும் நோய் வரும். இந்த நோய் மிகவும் வேதனையானது. இதை பற்றிய விளக்கத்தை தற்போது மருத்துவர் கார்த்திகேயன் வழங்கியுள்ளார்.

மருத்துவர் கார்த்திகேயன்
அக்கி என்பது ஒரு தோல் நோய் எனப்படுகின்றது. பொதுவாக இது 50 வயதை தாண்டியவர்களுக்கு வரும்.
சிறுவயதில் நமக்கு வரும் சின்னம்மை நோய்க்கு காரணமான வைரஸ் தான் அக்கி நோய் வருவதற்கும் காரணமாகிறது. இந்த வைரல் நமது சருமத்தில் ஒரு தடவை வந்துவிட்டால் வருடக்கணக்கில் அங்கேயே குடிகொள்ளக்கூடியது.
ஒருவேளை நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்றால் இந்த அக்கி நோய் நம்மை பாடாய் படுத்தும் என்று மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார்.

அக்கி நோய் உடலில் எங்கு பாதிக்கும்?
இந்த அக்கி நோய் உடலில் எங்கு வேண்டுமானாலும் வரலாம்.
ஆனால் முதுகுப் பகுதியில் அல்லது மார்புக்குக் கீழே பிறப்புறுப்பு பகுதி கழுத்து கண் போன்ற இடங்களில் இவை கூட்டம் கூட்டமாக குடிகொள்ளும்.
குழந்தைகளுக்கு இந்த நோய் வரும் போது அவர்களின் கண்களின் மேல் அல்லது கழுத்துக்கு கீழே வாய்ப்பகுதி முழங்கை போன்ற பகுதியில் வரும். மிக மிக அதிகமாக யாருக்காக இருந்தாலும் பிறப்புறுப்பில் வருவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளது.

அறிகுறிகள்
அக்கி நோய் நமது சருமத்தை ஆக்கிரமிக்கப்போகின்றது என்றால் நமது உடல் நமக்கு சில அறிகுறிகளை காட்டும்.
- தோலில் கொப்புளங்கள் உருவாகும்.
- காய்ச்சல்
- தீராத தலைவலி
- அதிகமாக மூட்டு வலி போன்ற அறிகுறிகள் வரலாம்.
இந்த நோயை கட்டுப்படுத்த ஆன்டி வைரல் மருந்துகள் பரிந்துரைக்கப்படுவதாக மருத்துவர் கார்த்திகேயன் கூறி உள்ளார்.
இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களிடமிருந்து தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் கார்திகேயன் கூறி உள்ளார்.
குறிப்பாக கர்ப்பிணி பெண்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். நமக்கு முன்னதாக சின்னம்மை நோய் வந்திருக்கிறது என்றால் அக்கி நோய் வருவது எளிது எனப்படுகின்றது.
அக்கி நோய் தீவிரமானால் சில நேரங்களில் அது கண் பார்வை மற்றும் காது கேளாமை போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம் என மருத்துவர் கார்திகேயன் கூறி உள்ளார்.

அக்கி நோயில் இருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது?
நாம் வெயில் காலத்தில் சாப்பிடும் உணவில் காரம் உப்பு குறைவாக இருப்பது அவசியம்.
தினமும் உணவில் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். அத்தோடு கீரை மற்றும் தயிர் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
சர்க்கரை பானங்கள் மற்றும் காரமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மேலும் பூண்டு மற்றும் மஞ்சள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆயுள்வேத தீர்வு - இந்த நோய்க்கு ஆயுள்வேதத்தில் ஒரு சுத்திகரிப்பு சிகிச்சை உள்ளது என மருத்துவர் கூறி உள்ளார்.
தாமரை, கருங்குவலை, விளாமிச்சை, பால் மற்றும் நெய் சேர்த்து அக்கி பாதிப்பு இருக்கும் இடங்களின் மேல் பூசலாம்.
அதிமதுரம் கஷாயம் மற்றும் கோரைக்கிழங்கு கஷாயம் போன்றவற்றை மருந்தாக குடிக்கலாம் என்று மருத்துவர் கார்திகேயன் கூறி உள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |