10 வயதில் பிசினஸில் அசத்தும் விஜய் பட நடிகையின் மகன்! என்ன பிசினஸ் தெரியுமா?
விஜயின் குஷி படத்தில் நடித்த நடிகை ஷில்பா ஷெட்டியின் 10 வயதில் புதிய தொழில் ஒன்றை ஆரம்பித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
நடிகை ஷில்பா ஷெட்டி ஐபிஎல் ராஜஸ்தான் அணியின் உரிமையாளராவார்.
இந்த நிலையில் அவரின் 10 வயது மகன் விஷான் தற்போது புதிய பிசினஸ் ஒன்றை தொடங்கி உள்ளதாக ஷில்பா ஷெட்டி அறிவித்துள்ளார்.

VRKICKS என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின் மூலம் பிரத்தியேகமான ஷூக்கள் தயாரித்து விஷான் விற்பனை செய்து வருகிறாராம்.
இவ்வளவு சின்ன வயசிலேயே தொழிலதிபரான தனது மகனை ஊக்குவிக்கும் விதத்தில் தனது மகன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான முதல் ஷூவை ஷில்பா ஷெட்டியே வாங்கியுள்ளார்.
இது குறித்த புகைப்படத்தை ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அவருடைய மகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்