119 ஆபாச காட்சியை 9 கோடிக்கு விற்க பிளான்: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் குறித்து அம்பலமாகிய உண்மை
ஆபாச படங்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்த வழக்கில் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட, பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா குறித்த பகீர் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகை ஷில்பா ஷெட்டி பாலிவுட் நடிகையாக இருந்தாலும், தமிழில் 'ரோமியோ', மற்றும் விஜய் நடித்த 'குஷி' படத்தில் நடித்துள்ளார்.
கணவர், குழந்தைகள் என மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவரது வாழ்க்கையில் மிகப்பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியது, வெளிநாட்டுகளுக்கு ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாசப்படங்களை தயாரித்து விற்பனை செய்த விவகாரத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து பல நடிகைகள் புகார் அளித்த நிலையில், இதில் ஷில்பா ஷெட்டிக்கும் தொடர்பு இருக்கின்றதா? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதனை மறுத்து வந்த ஷில்பா ஷெட்டி, கணவருக்கு நேராக இவரிடம் விசாரணை செய்த போது, கோவத்தில் கணவரை நன்கு திட்டி அங்கேயே பிரச்சனை செய்ததாகவும், பின்பு பொலிசார் சமாதானம் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆபாச பட விவகாரம் தொடர்பாக, மனதளவில் அதிருப்தியில் இருந்து வரும் ஷில்பா ஷெட்டி அவரது கணவரை பிரிய முடிவு செய்ததாகவும் தகவல் வெளியானது.
மேலும் ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட ராஜ் குந்த்ரா, நேற்றைய தினம் ஜாமீனில் வெளிவந்தார். இவர் மீது மும்பை காவல் துறையினர் சுமார் 1400 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வழக்கு விசாரணையின்போது ராஜ்குந்த்ராவின் லேப்டாப், செல்போன் ஹார்ட் டிஸ்க்குகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வில் 119 ஆபாச வீடியோக்கள் இருந்ததும், அதை ரூ 9 கோடிக்கு விற்க திட்டமிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.