ஆபாச படங்கள் குறித்து டுவிட் செய்த பிரபல நடிகையின் கணவர்!
மகாராஷ்டிராவில் ஆபாசப் படங்களைத் தயாரித்த வழக்கில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை மும்பை போலீசார் கைது செய்தனர்.
ஆபாச படங்களை தயாரித்து அதனை செயலி மூலம் வெளியிட்டு வந்ததில் முக்கிய குற்றவாளியாக ராஜ் குந்த்ரா பார்க்கப்படுகிறார்.
இதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறும் மும்பை போலீசார், விசாரணையின் போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என கூறுகின்றனர்.
இந்நிலையில் சுமார் 9 ஆண்டுகளுக்கு முன், அதாவது 2012ஆம் ஆண்டு ஆபாசப் படங்கள் குறித்தும், பாலியல் தொழில் குறித்தும் அவர் பதிவிட்ட ட்வீட்கள் தற்போது வைரலாகியுள்ளது.

ராஜ் குந்த்ரா தனது பழைய ட்வீட்டில், "இந்தியாவில் நடிகர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள், கிரிக்கெட் வீரர்கள் அரசியலில் ஈடுபடுகின்றனர். அரசியல்வாதிகள் ஆபாசப் படங்களைப் பார்க்கின்றனர். ஆபாச நட்சத்திரங்கள் நடிகர்களாகி வருகிறார்கள்" என ட்வீட் செய்துள்ளார்.
மற்றொரு ட்வீட்டில், "ஆபாசப் படங்கள் vs பாலியல் தொழில்..! கேமரா முன் ஆபாசப் படங்களில் நடிக்க ஒருவருக்குப் பணம் கொடுத்தால் அது சட்டப்படி சரி. இதற்கும் பாலியல் தொழிலுக்கும் என்ன வித்தியாசம்" என ட்வீட் செய்துள்ளார்.
இந்த இரண்டு ட்வீட்களும் இப்போது ட்விட்டரில் வைரலாகியுள்ளது.