14 வருட திருமண வாழ்க்கை முடிவிற்கு வருகிறதா? கணவனை விவாகரத்து செய்யும் ஷில்பா ஷெட்டி
பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி தன் கணவன் ராஜ்குந்த்ராவை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகை ஷில்பா ஷெட்டி
இந்தி சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஷில்பா ஷெட்டி. இவரின் தனித்துவமான நடிப்பிற்கும் செயல்களுக்கு இவருக்காக பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இவர் தமிழில் கூட பிரபுதேவாவுடன் ஒரு திரைப்படத்தில் நடித்து தமிழ் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர். அதுமட்டுமில்லாமல் விஜய்யுடனும் ஒரு படத்தில் முழு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.
சினிமா தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு தொழிலதிபர் ராஜ்குத்ராவை திருமணம் செய்துக் கொண்டார். இவருக்கு தற்போது 47 வயதாகின்ற போதிலும் இன்னும் அதே இளமையுடன் இணையத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
விவாகரத்து செய்கிறாரா?
இந்நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி அதிகம் வைரலாகி வருகின்றது. அதாவது நடிகை ஷில்பா ஷெட்டி தன் கணவனை விவாகரத்து செய்யவுள்ளதாக பரவி வருகின்றது.
ஷில்பா ஷெட்டியின் கணவன் இந்தியன் பிரிமீயர் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளராக இருந்தார். மேலும், இவர் மாடல் நடிகைகளை நிர்வாண படங்களில் நடிக்க வைத்து வீடியோ எடுத்து அதனை படமாக வெளியிட்டு பணம் சம்பாதித்த குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.
பிறகு ஜாமினில் வெளிய வந்த இவர் சத்தமில்லாமல் இருந்தார். இந்நிலையில் ராஜ் குந்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார் அதில், "நாங்கள் பிரிந்துள்ளோம், இந்த கடினமான காலகட்டத்தில் எங்களுக்கு நேரத்தை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என பதிவிட்டிருக்கிறார்.
We have separated and kindly request you to give us time during this difficult period ??
— Raj Kundra (@onlyrajkundra) October 19, 2023
ஆனால் இதில் யாருடைய பெயரையும் குறிப்பிடாத காரணத்தால் அவர் மனைவி ஷில்பா ஷெட்டியை தான் இவர் விவாகரத்து செய்து விட்டார் என்று தகவல்கள் பரவி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |