8 ஆண்டுக்கு பின் மனைவியை விவாகரத்து செய்த ஷிகர் தவான் - மனைவியின் உருக்கமான பதிவு!
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான 35 வயதான ஷிகர் தவான், அவரின் மனைவி ஆயிஷா முகர்ஜியை விவாகரத்து செய்துள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஓபனர் பேட்ஸ்மேன்னான ஷிகர் தவான் கடந்த 2012-ம் ஆண்டு ஆயிஷா முகர்ஜியை திருமணம் செய்துகொண்டார். இவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இதன் மூலம் 10 ஆண்டுகளாக நீடித்து வந்த அவர்களின் திருமண பந்தம் தற்போது முறிந்துள்ளது.
ஷிகர் தவானுடன் விவாகரத்து ஆகியிருப்பதாக அவருடைய மனைவி ஆயிஷா முகர்ஜி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் எமோஷனலாக பதிவிட்டுள்ளார். அதில், ஷிகர் தவான் இதனை உறுதிப்படுத்தாத நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பாலோயர்களுக்காக உருக்கமான பதிவின் மூலம் ஆயிஷா தனது உணர்வுகளை வெளிக்காட்டியுள்ளார்.
உருக்கமான இன்ஸ்டா பதிவில், “முதலில் விவாகரத்து என்பது ஒரு அழுக்கான வார்த்தை என, இரு முறை விவாகரத்து ஆகும் வரை நினைத்துக் கொண்டிருந்தேன். வார்த்தைகள் எவ்வளவு வலிமையானவை, எவ்வளவு அர்த்தங்கள் அதில் புதைந்திருக்கின்றன என்பதை முதல் முறை விவாகரத்து ஆகும் போது புரிந்து கொண்டேன்.
முதல் முறை விவாகரத்து ஆகும் போது மிகவும் பயந்தேன் நான் மிகவும் தவறான ஒரு விஷயத்தை செய்வதாகவும், தோல்வி அடைந்தவளாகவும் உணர்ந்தேன். சுயநலக்காரியாகவும், அனைவரையும் காயப்படுத்தியதாக உணர்ந்தேன். என்னுடைய பெற்றோரை கைவிட்டதாக உணர்ந்தேன். என்னுடைய குழந்தைகளுக்கு அநீதி கொடுத்ததாக கருதினேன்.
விவாகரத்து அவ்வளவு மோசமான வார்த்தை. இப்போது நினைத்துப் பாருங்கள் இரண்டாவது முறையாக நான் அதனை கடந்து செல்கிறேன். இது மிகவும் கொடூரமானது. இரண்டாவது முறையாக திருமணம் முறிந்த பின்னர் மிகவும் பயங்கரமாக இருந்தது. ஆனாலும் விவாகரத்தின் அர்த்தங்களை கற்றுக்கொண்டேன்.
விவாகரத்து என்பது திருமணம் என்ற பெயரில் என்னுடைய வாழ்க்கையை பிறருக்கு அர்ப்பணிக்காமல் என்னை தேர்ந்தெடுப்பதுவாகும். மேலும், சில நேரங்களில் நாம் செய்யும் எதுவுமே வேலைக்கு ஆகாது.
ஆனால் அது பரவாயில்லை. எனது உறவுகள், எதிர்கால உறவுகளுடன் எப்படி இருக்க வேண்டும் என்ற பாடங்களை கற்றுத்தருவது தான் விவாகரத்து நான் எப்போதும் இருப்பதைக் காட்டிலும் வலிமையானவளாக இருப்பதே விவாகரத்து விவாகரத்து என்பதற்கு நீங்கள் என்னென்ன அர்த்தங்கள் கொடுக்கிறீர்களோ அது தான் விவாகரத்து.
ஒரு உறவை முறிக்க முடியாமல் பயப்படுகிறீர்களா அல்லது சிரமத்தை அனுபவிக்கிறீர்களா எனக்கு தனி செய்தி அனுப்புங்கள் என அவர் மிகவும் உணர்ச்சிகரமாக கூறியுள்ளார்.