Shikhar Dhawan: சர்வதேச கிரிகட்டில் இருந்து விலகிய ஷிகர் தவான்- காரணம் என்ன?
இந்திய கிரிக்கட் அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரராக இருந்த ஷிகர் தவான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
ஷிகர் தவான்
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் தான் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் 13 ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாடி வந்தார்.
இந்தியாவிற்காக இதுவரை 34 டெஸ்ட் போட்டிகள், 167 ஒருநாள் போட்டிகள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2010ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார்.
தற்போது 38 வயதான தவான் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வீடியோ மூலம் அறிவித்துள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசும் போது "இன்று நான் திரும்பிப் பார்க்கும்போது, எனக்கு நல்ல நினைவுகள் மட்டுமே உள்ளன.
எனக்கு ஒரே ஒரு கனவு இருந்தது, அது இந்தியாவுக்காக விளையாட வேண்டும், நான் அதை அடைந்தேன் நான் நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடிய எனது அணிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
எனக்கு இன்னொரு குடும்பம் கிடைத்தது, எனக்கு பெயர், புகழ் மற்றும் ரசிகர்கள் அனைவரின் அன்பும் கிடைத்தது"என கூறியுள்ளார். இவர் கடைசியாக 2018 ம் ஆண்டு டெஸ்டிக் விளையாடி 2022ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் கடைசியாக இந்தியாவிற்காக விளையாடினார். இதன் பின்னர் 021ம் ஆண்டு கடைசியாக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடினார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |