நடிகர் இறப்பதற்கு முன் DJD போட்டியாளருக்கு கொடுத்த பரிசு- கண்ணீருடன் வாங்கி வந்த அர்ச்சனா
நடிகர் ஷிஹான் ஹூசைனி இறப்பதற்கு முன்னர் DJD நிகழ்ச்சி போட்டியாளருக்கு தான் வைத்திருந்த ஒரு பொருளை பரிசாக கெ
நடிகர் ஷிஹான் ஹூசைனி
கே. பாலசந்தரின் இயக்கத்தில் கடந்த 1986ம் ஆண்டு வெளியான புன்னகை மன்னன் படத்தின் மூலம் நடிகராக அறியப்பட்டவர் தான் நடிகர் ஷிஹான் ஹூசைனி.
இவர், விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படத்திலும் நடித்து இருந்தார்.
அதன் பின்னர், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்துள்ளார்.
மதுரையை சேர்ந்த பிரபல கராத்தே மாஸ்டரான ஷிஹான் ஹூசைனி, 300க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சியளித்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும், தமிழ் சினிமாவில் பிரபலமான நடன கலைஞராக இருக்கும் கலா மாஸ்டரின் முதல் மாணவன் என்றும், மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கு ஹூசைனி எப்போதும் முன்னாள் வருவார் என்றும் இறந்த பின்னர் காணொளியில் கூறியிருந்தார்.
ஷிஹான் ஹூசைனி கொடுத்த பரிசு
இந்த நிலையில், பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் DJD நிகழ்ச்சியில் சந்துரு என்பவர் கலந்து கொள்கிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் அவஸ்தைப்பட்டு வருகி்றார் என்பதனை முதல் நாள் தேர்வில் கூறினார்.
“இவருக்கு அழகான பெண் குழந்தையொன்று இருக்கிறது. எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் என்னுடைய மகளுக்காக தான் இந்த நிகழ்ச்சி கலந்து கொள்கிறேன்..” என்றும் பேசியிருந்தார்.
நடிகர் ஷிஹான் ஹூசைனி இறப்பதற்கு முன்னர் அவருக்கு துணையாக வைத்திருந்த புத்தர் சிலையை அன்பளிப்பாக கொடுத்து விட்டு, சிகிச்சையை நன்றாக முடித்து விட்டு DJD நிகழ்ச்சிக்கு வரப்போவதாகவும் கூறியுள்ளார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.
அவர், கடைசியாக விட்டுச் சென்ற புத்தர் சிலை இந்த வாரம் மேடையில் போட்டியாளருக்கு கொடுக்கப்படுகிறது.
சிலையை வாங்கிய அர்ச்சனா மேடையில் இல்லாவிட்டாலும் அந்த இடத்தை மணிமேகலை பூர்த்திச் செய்து, போட்டியாளருக்கு அன்பளித்த புத்தர் சிலையை கொடுத்திருக்கிறார்.
இப்படியாக கடைசியாக நடிகர் பகிர்ந்து கொண்ட விடயங்களை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், சந்துருவுக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |