இன்று வெள்ளிக்கிழமையில் இதை தவறாமல் செய்திடுங்க: செல்வம் பலமடங்கு அதிகரிக்குமாம்
வெள்ளிக்கிழமை என்பது ஒரு மங்களகரமான நாளாக பார்க்கப்படுவதுடன், சில காரியங்களை இந்த கிழமையில் செய்தால் வீட்டில் செல்வம் பல மடங்காக உயரும். இதற்கு செண்பகப்பூ அதிகமாக உதவி செய்கின்றது.
தினந்தோறும் செண்பகப் பூவை மகாலட்சுமிக்கு சூட்டுவதால் வீட்டில் வறுமை நிரந்தரமாக அகற்றப்படும். செண்பகப் பூவானது சுக்கிரனுக்கு மிகமிக விருப்பமான பூ என்றும் கூறப்படுகின்றது.
சுக்கிர பகவானை நினைத்து இந்த பூவை மகாலட்சுமிக்கு வைத்து வழிபாடு செய்ய வேண்டும். குறிப்பாக வெள்ளிக்கிழமையன்று வரக்கூடிய சுக்கிர ஹோரையில், மகாலட்சிமியை நினைத்து பூஜை அறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
மேலும் எப்படிப்பட்ட தீர்க்கமுடியாத துன்பங்களையும் தீர்த்து வைக்கும் இந்தப் பூவை குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்று முருகப்பெருமானுக்கு சூட்டி வேண்டினால் விரைவாகவே உங்களது கஷ்டம் தீர்ந்து விடும்
வீட்டில் செண்பகப் பூ செடி இல்லாதவர்கள் கடையில் முன்பே கூறி வாங்கி வைத்து, வெள்ளிக்கிழமையில் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் பூஜை அறையில் வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்.
பூஜையில் வைத்த செண்பகப் பூ காய்ந்ததும், அந்த பூவை பூஜை பொருட்கள் போடும் குப்பையில் சேர்த்து விட வேண்டும்.