பாட்டியின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றிய பேத்தி.... என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா?
பாட்டி ஒருவர் தனது பேத்தியிடம் பரிசு பெற்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. "தனது வாழ்நாள் முழுவதும் ஒரு பார்பி பொம்மையை பெற விரும்பினேன்" என்ற தலைப்பு உள்ளது.
அந்த வீடியோ காட்சியில் " டோனா கார்மோசா என்ற பாட்டிக்கு அவரது பேத்தி சர்ப்ரைஸாக ஒரு அழகான பார்பி பொம்மையை கொடுக்கிறார்.
அதனை பிரித்து பார்க்கும் பாட்டி ஆச்சரியப்படுகிறார், மேலும் அவரது பேத்தியை கட்டியணைத்து மகிழ்ச்சியுடன் முத்தம் கொடுக்கிறார். பிரேசிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தனது பாட்டியிடம் இதுவரை பார்பி பொம்மைகள் இல்லை என்பதையும், அவருக்கு பார்பி என்றால் அதிக விருப்பதையும் உணர்ந்து கொண்ட அந்த பாட்டியின் பேத்தி அவருக்கு தெரியாமல் பார்பி பொம்மையை வாங்கி பரிசாக அளித்துள்ளார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த பாட்டி கண்ணீர் மல்க பேத்திக்கு நன்றி கூறியுள்ளார்.
BEAUTIFUL SURPRISE ?❤️?
— GoodNewsCorrespondent (@GoodNewsCorres1) July 11, 2021
(Brazil) Dona Carmoza is surprised with a Barbie doll from her granddaughter...she'd wanted a Barbie her whole life. pic.twitter.com/MS6Kotbth3