ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு... 17 பேர் மருத்துவமனைவியில் அனுமதி
ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ணுஏற்படுத்தியுள்ள நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா விற்பனை செய்ய தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
ஷவர்மா சாப்பிட்ட மாணவி
இந்தியாவில் நாமக்கல் மாவட்டத்தில் சந்தப்பேட்டை புதூர் பகுதியைச் சேர்ந்த தவக்குமார். இவரது மனைவி மற்றும் மகள் கலையரசி மற்றும் மைத்துனர் நேற்று தனியார் உணவகம் ஒன்றில் ஷவர்மா பார்சல் வாங்கி வந்துள்ளனர்.
இதே போன்று நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் பிறந்தநாள் என்பதால் தனது நண்பர்கள் 13 பேருக்கு ட்ரீட் கொடுப்பதற்காக ஷவர்மா வாங்கி சென்றுள்ளார்.
இதை சாப்பிட்ட 13 பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கலையரசி குடும்பத்தினர் 4 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கலையரசி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அங்கு சோதனை நடத்திய போது கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்து அழித்ததுடன், உணவகத்திற்கு சீல் வைக்கவும் செய்துள்ளனர்.
கெட்டுப்போன ஷவர்மா விற்பனை செய்த உணவக உரிமையாளர், சமையல்காரர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மாவிற்கு தற்போது தடை விதிக்கவும் செய்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |