சௌபாக்கிய யோகத்தால் வாழ்க்கையில் எதிர்பாராததை சந்திக்கபோகும் ராசிகள்
தற்போது டிசம்பர் மாதத்தின் 2-வது சனிக்கிழமை தினத்தில் சந்திரன் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்கிறார்.
இப்படி சந்திரன் ஏழாவது வீட்டிலும், சூரியனிலிருந்து பதினொன்றாவது வீட்டிலும் அமைந்துள்ளதால், அவர் உச்ச நிலையை அடைந்து பல நற்பலன்களை வழங்குகிறார்.
குருவிலிருந்து மைய வீட்டில் சந்திரன் இருப்பதால் கஜகேசரி யோகம் உருவாகிறது. மேலும், ஹஸ்த நட்சத்திர சேர்க்கையால் ஆயுஷ்மான் மற்றும் சௌபாக்ய யோகங்களும் இன்று ஏற்படுகின்றன.
இந்த சுப யோகங்களின் சேர்க்கை காரணமாக, ஐந்து ராசியினருக்கு இது பொற்காலம் போல நன்மைகளை அள்ளி தரும்.

சௌபாக்கிய யோகம்
மிதுனம்
- மிதுன ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தால் பல நன்மைகள் கிடைக்கும். பணியிடத்திலும் - குடும்ப வாழ்க்கையிலும் எதிர்பார்த்த மாற்றங்கள் கிடைககும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் திட்டத்தின் படி பணிகளை விரைவாக முடிப்பீர்கள். சுய தொழில் செய்வதற்கு பல வாய்ப்புகள் கிடைக்கும்.
கன்னி
- கன்னி ராசிகாரர்களுக்கு தொழில் லாபம் கிடைக்கும். குறிப்பாக உலோகம் சார்ந்த தொழில் செய்து வரும் நபர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். செய்த முதலீடுகளுக்கு வருமானம் அதிகமாக கிடைக்கும். இவர்களின் நட்சத்திரங்களின் சாதகமான சேர்க்கை, பணியிடத்தில் நற்பெயர் சம்பாதிக்கும் வாய்ப்புகளை கொண்டு வரும். தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி உயர் பதவிகள் மற்றம் ஊதிய உயர்வு காணும் வாய்ப்புள் கிடைக்கும்.
துலாம்
- துலாம் ராசிகளுக்கு தொழில் வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கையிலும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் இன்று சுற்றுலா செல்லும் வாய்ப்புகள் காணப்படுகிறது. குழந்தைகள் வழியே ஒரு நற்செய்தி பெறும் வாய்ப்பும் கிடைக்கும். பவெளிநாட்டில் தொழில் செய்து வரும் நபர்கள், தங்கள் தொழிலில் போதுமான லாபத்தை காண்பார்கள். உள்நாட்டில் தொழில் செய்து வரும் நபர்கள், தங்கள் தொழிலை விரிவுப்படுத்தும் வகையில் வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வருவார்கள்.
தனுசு
- தனுசு ராசிகாரர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு பெயர்ச்சியாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நிதி விஷயங்கள் சாதகமாக இருக்கும், வியாபாரத்தில் போதுமான வருமானம் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த கடன் முடிவுக்கு வரும். பணம் வரவேண்டிய இடத்தில் இருந்து பண் வந்து சேரும்.
கும்பம்
- கும்ப ராசிகாரர்களுக்கு எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றும் விதமாக சக ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் வழியே எதிர்பார்த்த ஆதரவு மற்றும் உதவிகள் கிடைக்கும். பணியிடத்தில் மூத்த ஊழியர்களின் வழிகாட்டுதல், உங்கள் தொழில்முறை வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை கற்க உதவியாக இருக்கும். பணியிடத்தில் செல்வாக்கும், பெயரும் புகழும் கிடைக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).