பாய்ந்து பாய்ந்து கத்தி தீட்டும் குரங்கு! வியந்து போன நெட்டிசன்கள்
குரங்கு ஒன்று கத்தியை கல்லால் தீட்டி கூர்மைப்படுத்தும் வீடியோக்காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
விலங்குகளின் சேட்டை வீடியோ
சமூகவலைத்தளங்கள் பக்கம் சென்றாலே எம்மை வியக்க வைக்கும் பல வீடியோக்கள் பரவி கிடக்கின்றன.
அந்த வீடியோக்களில் சில வியங்குகள் நமது சிந்தனைக்கு அப்பாற்ப்பட்ட சில வேளைகளை செய்கிறதை காணலாம்.
இது போன்ற வீடியோக்கள் அதிக மன உளைச்சலில் இருக்கும் போது பார்த்தால் மனதிற்கு ஒரு நிம்மதி உருவாக்கிறது. இதனால் தான் விலங்குகளின் வீடியோக்கள் அதிகமாக ஷேர் செய்யப்படுகிறது.
image - Twitter
கத்தி தீட்டும் குரங்கு
இதன்படி, குரங்கு ஒன்று கத்தியை எடுத்து தண்ணீர் தெளித்து தெளித்து கல்லால் தீட்டுகிறது.
இருப்பினும், குரங்கு மனிதனின் செயல்களைப் பின்பற்ற முயற்சிக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சியை ஐ பி எஸ் அதிகாரி ரூபின் ஷர்மா அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோக்காட்சி சுமார் 2 மில்லியன் கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். இதனை பாரத்த நெட்டிசன்கள், “ மனிதர்களை மிஞ்சும் அளவிற்கு குரங்குகளின் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.” என கருத்துக்களை பதிவிட்டுள்ளார்கள்.
#Ravana ki #Lanka ki chadhai se pahle aise ki thi tayyari #VanarSena ne
— Rupin Sharma IPS (@rupin1992) February 22, 2023
?????@arunbothra @ParveenKaswan @ipsvijrk pic.twitter.com/i6xH6S4yap