அடுத்தடுத்து அரைசதம் விளாசிய ஷர்துல் தாக்கூர்.. கதிகலங்கிய இங்கிலாந்து; மகிழ்ச்சியில் ரசிகர்கள்
இந்திய இங்கிலாந்து உடனான டெஸ்ட் போட்டியின் 4-வது நாளில் ஆட்டத்தில் ஷர்துல் தாக்கூர் இரண்டாவது முறையாக அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.
அணிக்காக அவர் பேட்டிங்கில் கொடுத்துள்ள பங்களிப்பு இந்த ஆட்டத்தில் பக்கபலமாக அமைந்துள்ளது இவர், முதல் இன்னிங்ஸில் 36 பந்துகளுக்கு 57 ரன்களை குவித்திருந்தார். தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் 72 பந்துகளில் 60 ரன்களை அடித்துள்ளார்.
அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் அடங்கும். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் தாக்கூர் பதிவு செய்துள்ள மூன்றாவது அரை சதமாகும். மேலும், இந்த ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் பண்ட் உடன் சேர்ந்து 100 ரன்களுக்கு ஏழாவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார்.
இறுதியில் ரூட் சுழலில் சிக்கி அவுட்டானார். இந்திய அணி 466 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியுள்ளது.
தற்போது களமிறங்கிய இங்கிலாந்து அணி 49 ரன்களுக்கு விக்கெட் ஏதும் இன்றி விளையாடி வருகிறது. நாளை நாள் ஆட்டம் ஐந்தாவது நாள் ஆட்டமாகும்.
5️⃣0️⃣ in the first innings ✅
— Sony Sports (@SonySportsIndia) September 5, 2021
5️⃣0️⃣ In the second innings ✅
1️⃣ Shardul Thakur!
Tune into Sony Six (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV (https://t.co/AwcwLCPFGm ) now! ?#ENGvINDOnlyOnSonyTen #BackOurBoys #Thakur pic.twitter.com/0eAobMJPTF