8 வருஷமாச்சி.. குழந்தை பற்றி பேசியவர்களை கலாய்த்த தம்பதிகள்.. விளாசும் இணையவாசிகள்
“ஒரு கல்யாணத்துக்கு போக முடியல, குழந்தை எப்போன்னு கேட்கிறாங்க..” என சாந்தனு-கிகி பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சாந்தனு
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் பாக்யராஜின் மகன் தான் சாந்தனு. இவர், “சக்கரக்கட்டி” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து, சித்து + 2, கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைப்பேசி, வாய்மை, கோடிட்ட இடங்களை நிரப்புக, முப்பரிமாணம், வானம் கொட்டட்டும், மாஸ்டர், கசடதபற, முருங்கைக்காய் சிப்ஸ், ராவண கோட்டம் மற்றும் ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இத்தனை படங்கள் நடித்திருந்தாலும் சாந்தனுக்கு நினைத்த இடம் இதுவரையில் கிடைக்கவில்லை. ஆனாலும் முயற்சியை கை விடாமல் சினிமாவில் நடித்து வருகிறார்.
பேட்டியில் உடைக்கப்பட்ட உண்மை
இந்த நிலையில், தொகுப்பாளினியாக இருந்த கிகி எனும் கீர்த்தனாவை கடந்த 2015ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
தற்போது இவர்களுக்கு திருமணமாகி சுமார் 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. ஆனால் இதுவரையில் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இப்படியொரு நிலையில், சாந்தனு-கிகி இருவரும் சமிபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தனர்.
அப்போது, “ஒரு திருமணத்துக்கு கூட போக முடியவில்லை எங்கு போனாலும் சில பூமர் ஆன்டிகள் நைஸாக வந்து குழந்தை எப்போன்னு கேட்டு டார்ச்சர் பண்றாங்க,..” என இருவரும் கவலையாக பேசியிருந்தனர்.
இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |