trending photos - விஜயகாந்த் மகனா இது? தாடி மீசையெல்லாம் வைத்து அட்டகாசமா இருக்காரே!
விஜயகாந்தின் இளைய மகனான நடிகர் சண்முகபாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன்.
கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த சகாப்தம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
அதற்கடுத்து மதுரை வீரன் என்ற படத்தில் நடித்தார். அந்த படமும் சண்முக பாண்டியனுக்கு கைகொடுக்கவில்லை.
அதனால் மொத்தமாக சினிமாவை விட்டு விலகி தனது அப்பா தலைவராக இருக்கும் தேமுதிக கட்சியில் இணைந்தார்.
தற்போது இயக்குனர் சசிகுமார் எடுக்க இருக்கும் வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சண்முக பாண்டியன் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
இப்பொழுது முகத்தில் தாடி வைத்து சண்முகபாண்டியன் டிப்டாப்பாக கலக்கி உள்ளார். விஜயகாந்த் மகனா இது, அட்டகாசமா இருக்காரே என ரசிகர்கள் புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.

