சனியின் வக்ர பெயர்ச்சி... அதிர்ஷ்டத்தை தட்டித் தூக்கும் 3 ராசியினர்
சனியின் வக்ர பெயர்ச்சியால் அடுத்த 6 மாத காலத்திற்கு அதிர்ஷ்டத்தினை பெறும் 3 ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சனி வக்ர பெயர்ச்சி
நவ கிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக சனி இருக்கின்றது. சனி பகவான் என்றாலே மக்கள் அதிகமாக அச்சப்படுவார்கள். ஏனெனில் நீதியின் கிரகமாக பார்க்கப்படும் சனி பகவானை ஜோதிடத்தில் கர்ம காரகன் மற்றும் ஆயுள் காரகன் என்று அழைக்கப்படுகின்றது.
ஆனால் பலரும் நினைப்பது போன்று சனி பகவான் கெடுதல் செய்யும் கிரகம் அல்ல. முற்பிறவி மற்றும் இப்பிறவியில் நாம் செய்யும் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை பெறுவார்.
நற்செயல்கள் செய்பவர்களை அசுர வேகத்தில் வளர்ச்சியடையவும், தீய செயல்கள் செய்பவர்களை தண்டனையும் அளிக்கின்றார்.
ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயர்வதற்கு இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் நிலையில், இந்த சஞ்சாரத்தின் போது வக்ர நிலைக்கும் செல்வதுண்டு.
ஜுலை 27ம் தேதி முதல் டிசம்பர் மாதம் வரை சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்க உள்ள நிலையில், இதனால் 3 ராசியினர் மட்டும் நேர்மறைய ஆற்றலை பெறுகின்றனர். குறித்த ராசியை பற்றி தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்
ரிஷப ராசியில் 11வது வீடான லாப ஸ்தானத்தில் சனி பெயர்ச்சி நிகழ்வதால், நீண்ட நாள் கனவு மற்றும் லட்சியம் நிறைவேறுமாம். நினைத்த காரியத்தினை தடையில்லாமல் செய்து முடிப்பீர்கள்.
இந்த காலக்கட்டத்தில் ரிஷப ராசியினருக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் தருணமாக இருக்கின்றது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த விடயங்கள் சுமூகமாக கைக்கூடும்.
பணி செய்யும் இடத்தில் தகுந்த அங்கீகாரமும், மதிப்பும், மரியாதையும் தேடி வருவதுடன், பதிவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

மிதுனம்
மிதுன ராசியினரின் 10வது வீட்டில் கர்ம ஸ்தானத்தில் சனி வக்ரமாக அமையும் நிலையில், தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியாக மாறுமாம்.
முன்னேற்றத்திற்கு புதிய வழிகள் கிடைப்பதுடன், புதிய வீடு, மனைவி மற்றும் வாகனம் வாங்கும் யோகம் கைகூடிவருமாம். சனியின் ஆசியால் வாழ்க்கையில் வசதி மற்றும் ஆடம்பரம் தேடி வரும். பழைய கடன்களிலிருந்து முற்றிலும் நிவாரணம் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 5வது வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி வக்ர இயக்கம் இருக்கின்றது. ஆரோக்கிய பிரச்சனை, குடும்ப பிரச்சனைகள் முடிவிற்கு வருவம்.
தடைபட்ட திருமண பேச்சுகள் சுமூகமாக முடியும் நிலையில், வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுப நிகழ்ச்சிகளும் அமைய வாய்ப்புகள் அதிகம். புதிய தொழில் மற்றும் வியாபாரம் தொடர்வதற்கு இவை பொன்னான தருணமாகும். முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |