ஆட்டிப்படைக்கும் ஏழரை, அஷ்டம சனி! இந்த பரிகாரத்தை மறக்காமல் செய்திடுங்க
பொதுவாக ஒருவரின் முன் ஜென்ம கர்ம வினைகளை பொருத்து சனிபகவான் அவர்களுக்கான தண்டனையை கொடுப்பதே ஏழரை சனி அல்லது அஷ்டமத்து சனி எனப்படும்.
ஏழரைசனி மற்றும் அஷ்டமத்து சனி இவை இரண்டுமே வயதிற்கு ஏற்றார் போல் பிரச்சினைகளைக் கொடுக்கும்.
நான்கு வயது முதல் 15 வயதில் உள்ளவர்களுக்கு படிப்பில் சற்று மந்தமாகவும் மிகவும் கவனக்குறைவு 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணத்தில் நிறைய பிரச்சனைகள் உண்டாகும். அதையும் மீறி அவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கும் பொழுது கணவன் மனைவி இருவருமே மிகப் பெரிய பாதிப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
எனவே முடிந்தவரை இதிலிருந்து வெளிவரும் சிறந்தாகும். இந்த பிரச்சினைக்கு தீர்வு தரும்விதமாக ஒரு சில எளிய பரிகாரங்களை எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
- யாராவது பிச்சை என்று உங்களிடம் கேட்டு வந்தால் அதனை பயன்படுத்திக்கொண்டு அவர்க்கு பிச்சை போடுங்கள்.
- ஒரு சிலருக்கு மருத்துவசெலவு பிச்சிக்கொண்டு போகும். இவர்கள் உங்களின் ஊரில் உள்ள வறுமையில் உள்ள நோயாளிக்கு உங்களின் செலவில் வைத்தியம் பாருங்கள் அல்லது வைத்தியத்திற்க்கு பணம் கொடுங்கள்.
- ஒரு சிலருக்கு ஏழரையில் ஜெயிலுக்கு செல்லவேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகும். உங்களின் ஊரில் இருக்கும் சப் ஜெயிலில் ஏதாவது ஒரு ஏற்பாடு செய்து அந்த உணவை வேண்டுமானால் ஒரு முறை சாப்பிடுங்கள்.
- தாழ்ந்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ஒரு உதவியை செய்யுங்கள். அது எப்படிப்பட்ட உதவியாக இருந்தாலும் செய்யலாம். அதுபோல ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
- இந்தியாவில் திருநள்ளாறு சென்று அங்குள்ள தீர்த்தத்தில் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு சனியையும் ஈஸ்வரனையும் தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.