7 வருடங்களாக ஷாம்பு பயன்படுத்தாமல் குளிக்கும் நபர் வெளியிட்ட காணொளி! என்னாச்சு பாருங்க..
7 வருடங்களாக ஷாம்பூ பயன்படுத்தாமல் இருந்த நபர் ஒருவர் தன்னுடைய அனுபவங்களை இணையவாசிகளுடன் பகிர்ந்துள்ளார்.
தற்போது பொழுதுப்போக்காக பயன்படுத்தி வந்த சமூக வலைத்தளங்களை வைத்து இன்று பலரும் பணம் சம்பாரித்து வருகிறார்கள்.
மேலும் யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை மற்றும் லைக்களை வைத்து பயனர்களை விலைக் கொடுத்து வாங்கி வருகின்றது.
இதிலிருந்து அதிகமான பணம் கிடைப்பதால் தெருவுக்கு இரண்டு யூடியூப்பர் என மாறும் வரையில் வளர்ச்சிக்கண்டு விட்டது.
வீடியோ மற்றும் போஸ்ட்டுக்களை பார்த்து தங்களின் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளும் நெட்டிசன்களும் இருக்கிறார்கள்.
ஷாம்போ பாவணையிலிருந்து மீண்ட நபர்
அந்த வகையில், 14.8k ஃபாலோவர்களை கொண்டுள்ள யுடியூப் சேனலை நடத்தி வரும் எய்டன் என்பவர் சரியாக 7 வருடங்கள் தலைக்கு ஷாம்போ பயன்படுத்தாமல் இருந்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட அந்த நபர், “என்னுடைய தலைமுடி ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் இருக்கின்றது.. இப்படி வளரும் என நான் எதிர்பார்க்கவில்லை..” என பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய எய்டன், “இன்றோடு கிட்டத்தட்ட ஷாம்பூவை பயன்படுத்துவதை நிறுத்தி ஆறு வருடங்களுக்கு மேல் ஆகிறது எந்த ஒரு கண்டிஷனரும் பயன்படுத்தாமல் இனி என்னுடைய தலை முடி மற்றும் தலையின் ஆரோக்கியத்தை சோதனை செய்து பார்க்க போகிறேன்” எனவும் பேசியுள்ளார்.
இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் தலையில் அதிகமான பொடுகு இருந்த காரணத்தினால் நிறைய ஷாம்போக்களை பயன்படுத்தியுள்ளார்.
பின்னர் அவர் தலையில் முடியில்லாமல் இருந்துள்ளது. இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வீடியோவுடன் இணைந்துள்ளார்.