இரண்டரை அடி கணவன் மூன்றடி உயரமுள்ள மனைவியோடு வந்து வாக்களிப்பு - வைரலாகும் வீடியோ
உ.பி.யில் இரண்டரை அடி உயரம் கொண்ட கணவனும், மூன்றடி உயரம் கொண்ட மனைவியோடு வந்து வாக்களித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வாக்களிக்க வந்த குள்ளமான கணவன் - மனைவி
ஒரு மனிதனுக்கு சாதாரண உயரம் 5 அடி 10 அங்குலம் வரை இருக்கும். ஆனால் பெரும்பாலோர் இந்த உயரத்தில் இருப்பதில்லை. சிலர் நெட்டையாகவும், சிலர் குட்டையாகவும் இருப்பர். இதற்கு காரணம் ஹார்மோன் பற்றாக்குறை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மிகவும் உயரம் கொண்ட மனிதர்களும், மிகவும் உயரம் குறைவான மனிதர்கள் பார்ப்பதற்கு மிகவும் வியப்பை கொடுப்பர். குட்டையான மனிதர்கள் அவர்களுக்கு என்ன வயதாலும் குழந்தைப் போலவே காட்சி அளிப்பர். நெட்டையாளர்கள் உடுத்தும் மிகப்பெரிய உடை, அவர்கள் அணியும் மிகப்பெரிய செருப்பு அனைத்தையும் பார்க்கும்போது வியப்பை கொடுக்கும்.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம், ஷாம்லியைச் சேர்ந்த பிரபல இரண்டரை அடி உயரம் அசிம் அன்சாரியும், அவரது மூன்றடி உயரம் கொண்ட அவரது மனைவி பேகமும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வந்தனர்.
அவர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்து வந்தபோது, அசிமையும், பேகத்தையும் வாக்குச்சாவடிக்கு வந்த ஏராளமான மக்கள் சூழ்ந்து கொண்டனர். பொதுமக்கள் அவர்களிடம் நின்று செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர். சில ஊடகங்கள் அவர்களிடம் பேட்டி எடுத்தன.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.