Ajith Kumar: அஜித்தின் தற்போதைய நிலை என்ன? ஷாலினி வெளியிட்ட புதிய பதிவு
நடிகர் அஜித்தின் தற்போதைய நிலையை அவரது மனைவி ஷாலினி புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் அஜித், கடந்த வாரத்தில் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார்.
இந்த தகவல் திரையுலகினர், ரசிகர்கள் என அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியது. இதற்கு அஜித்தின் மேலாளர், ரெகுலர் செக்கப் செய்வதற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.
ஆனால், அவரக்கு மூளையில் கட்டி இருப்பதாகவும், தண்டுவட பகுதியில் பிரச்சினை இருப்பதாகவும் 4 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்ததாக கூறப்பட்டது பெரும் அதிர்ச்சியை கிளப்பியது.
பின்பு அஜித்தின் மேலாளர் காதுக்கு கீழே உள்ள நரம்பு வீக்கம் உள்ளதாகவும், அதற்காக சிசிச்சை எடுத்ததாகவும் கூறினார்.
தற்போதைய நிலை என்ன?
ஆனாலும் அறுவைசிகிச்சை முடிந்த மறுநாளே மகன் பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்டு அனைவரையும் அஜித் வாயடைக்க செய்தார்.
இந்நிலையில் அஜித்தின் தற்போதைய நிலையை அவரது மனைவி ஷாலினி புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.
ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்தும், அவரது மகன் ஆத்விக்கும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உங்களால் வெல்ல முடியாது என்று நம்மிடம் சொல்லக்கூடிய ஒரே ஆள் நாம்தான் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அந்தப் புகைப்படத்தில் அஜித் தனது மகன் ஆத்விக்கிற்கு ஷூ போட்டுவிட்டுக்கொண்டிருக்கிறார். இப்புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் அஜித் பழைய நிலைக்கு வந்து விட்டார் என்று மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஆனால் இப்புகைப்படம் சிகிச்சைக்கு முன்பு உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |