காலில் விழுந்த மனைவி ஷாலினி... அடுத்த நொடியே அஜித் சொன்ன வார்த்தை! ட்ரெண்டாகும் காட்சி
வரலட்சுமி விரத பூஜையில் ஷாலினி அஜித்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் அஜித், ஷாலினி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித், இன்றும் ரசிகர்கள் கொண்டாடப்படும் உச்ச நடிகராக இருந்து வருகின்றார்.
1999ம் ஆண்டு அமர்க்களம் படத்தில் அஜித்துடன் ஷாலினி நடித்துள்ளார். அப்பொழுது இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில், வீட்டில் பெற்றோர்கள் சம்மதத்துடன் 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், நடிகர் அஜித் சினிமா மட்டுமின்றி கார் ரேஸிலும் கலந்து ரசிகர்களை வென்று வருகின்றனர்.
சமீபத்தில் இவர்கள் 25வது வருட திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய நிலையில், தற்போது மற்றொரு காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
ஆம் வரலட்சுமி பூஜையில் ஷாலினி நெற்றியில் அஜித் குங்குமம் வைத்துவிட்டார். பின்பு ஷாலினி அஜித் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.
அப்பொழுது அஜித் வீட்டுக்கு போனா அவங்க கால்ல நான் விழுகணும் என்று விளையாட்டாக கூறி சிரித்துள்ளார். இக்காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Manifesting Love Like This 🥹💎 pic.twitter.com/Jhf7QpMSJ1
— Tharun Billa (@Tharun_billa_) August 9, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |