பிக்பாஸ் சாக்ஷியா இது? புடவையில் ஜொலிக்கும் புகைப்படம்!
பொதுவாகவே நடிகைகள் தான் செய்யும் ஒவ்வொரு வேலையையும் அல்லது தான் செல்லும் இடங்களையும் புகைப்படம் எடுத்து அனைவருடனும் பகிர்ந்து கொள்வது இயல்பு.
அதை ரசிகர்களும் விருப்பத்துடன் பார்ப்பார்கள். ரசிகர்களின் லைக்குகள், கமென்டுகள் என்பவையே நடிகர்களை இன்னும் இன்னும் ஊக்கப்படுத்துபவையாக இருக்கின்றன.
அந்த வகையில் நடிகை சாக்ஷி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பின்னர் அனைவர் மத்தியிலும் மிகவும் பிரபலமானார்.
அதுமட்டுமில்லாமல் அரண்மனை, விஸ்வாசம், காலா போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்னர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியாகிய நான் கடவுள் இல்லை திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தி வரும் சாக்ஷி, தான் புடவையில் இருக்கும் படங்களை ட்விட்டரில் பதிவிட்டு, 'லோங் ட்ரைவ் போலாமா?' என்று பதிவிட்டுள்ளார். சாக்ஷியின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.