தயாரிப்பாளரால் நான் வேதனைப்பட்டேன்... - ரகசியத்தை போட்டுடைத்த பிரபல நடிகர்
என்னை ஒரு தயாரிப்பாளர் படுக்கை அறைக்கு கூப்பிட்டார் என்று ரகசியத்தை பிரபல நடிகர் ஒரு பேட்டியில் போட்டுடைத்துள்ளார்.
தயாரிப்பாளரால் நான் வேதனைப்பட்டேன்...
தொடக்கத்தில் நடிகை ஷகீலா ஆபாச படங்களில் நடித்து வந்தார். இதன் பிறகு, அவர் “குக் வித் கோமாளி” என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு “ஷகீலாம்மா” ஆக மாறிவிட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் ஷகிலா, நடிகர் வெற்றி விஜய்யை ஒரு சேனலுக்காக பேட்டி எடுத்தார். அப்போது, அந்த நடிகர் பல ரசிகங்களை போட்டுடைத்தார்.
அந்த பேட்டியில் அவர் பேசுகையில், நான் சினிமாவில் ஒரு நடிகராக அறிமுகமான பிறகு, எனக்கு வாய்ப்பு அவ்வளவாக கிடைக்கவில்லை.
அப்போது எனக்கு “ஏ” ரேட்டட் படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. அதில் நடித்தால் பணம் நிறைய கிடைக்கும் என்பதற்காக நடிக்க ஒப்புக் கொண்டேன். அதன் பிறகு ஷகீலாவோடு நிறைய படங்களில் நடித்தேன்.
ஆனாலும், நானும், ஷகீலாவும் அண்ணன் தங்கை போலதான் பழகினோம். என்னை சினிமாத் துறையில் முக்கிய நடிகைகள் காதலித்தனர். ஆனால், அவர்களெல்லாம் தவிர்த்து விட்டேன்.
என்னிடம் பல ஆண்களும் உறவு வைத்துக்கொள்ள விரும்பினார்கள். தமிழ் சினிமாவை சேர்ந்த ஒரு பிரபல தயாரிப்பாளர் என்னை ஒரு நாள் அந்த நோக்கத்தில் அழைத்தார்.
ஆனால், அவரிடமிருந்து நான் தப்பிவிட்டேன். இந்த மாதிரி ஆண்களும் பாலியல் ரீதியாக சில ஆண்களால் துன்புறுத்தப்படுகிறார்கள் என்றார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.