யாரையும் கையெடுத்து குடும்பிட்டது இல்லை... ஆனால்! கதறி அழுத ஷகீலா
பல பேர் சீரியலை வெறுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு மட்டும் தான் தற்போது அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது .
இதுவரைக்கும் ஷகிலா என்னும் பெயரை சொன்னாலே வேற மாதிரி கண்ணோட்டத்தில் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் தற்போது ஷகிலா கண்ணீரோடு பேசிய வீடியோவை பார்த்து கண் கலங்கி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

முதியோர் இல்லத்திற்கு தயவுசெய்து யாரையும் அனுப்பி விடாதீர்கள். அதுவும் உங்களது பெற்றோரை நீங்களே அனுப்பி விடாதீர்கள். அதிலும் சிலர் யாரும் அனுப்பவில்லை நாங்கள் இங்கே வந்து விட்டோம் என்று கூறியிருக்கிறார்கள். அதை கேட்கும் போது மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.
எந்த அளவிற்கு அவர்கள் கஷ்டத்தை அனுபவித்து இருந்தால் இந்த இடத்தை தேடி வந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் போது கண்ணீர் வருகிறது. அதனால் தயவு செய்து யாரையும் வயதான காலத்தில் இப்படி பண்ணாதீர்கள் என்று அவருடைய ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் .
மேலும் நான் இதுவரைக்கும் யாரிடமும் கையெடுத்து கும்பிட்டு கிடையாது ஆனால் தற்போது உங்கள் அனைவரிடமும் கையெடுத்து கும்பிடுறேன் என்று கண்ணீர் மல்க அவர் பேசியது தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது இவரின் இந்த மாதிரி வீடியோக்களுக்கு ரசிகர்களும் ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.