செத்தா கூட யாரும் வரமாட்டாங்கனு சொல்லிட்டாங்க! நடிகை ஷகீலா எமோஷனல் பேட்டி
Shakeela Emotional-Interview: நடிகை ஷகீலா சமீபத்தில் தீவிர உடல்நலப் பிரச்சினை காரணமாக கழுத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.
நீண்ட நேரம் தவறான உடல் நிலையில் மொபைல் போனைப் பயன்படுத்தியதே தனது உடல்நலப் பிரச்சினைக்கு காரணம் என தனது அறுவை சிகிச்சை உட்பட வாழ்வில் நடந்த பல்வேறு விடயங்கள் குறித்து சமீபத்திய பேட்டியொன்றில் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

நடிகை ஷகீலா எமோஷனல்
நடிகை ஷகீலா குறிப்பிடுகையில், நீண்ட நேரம் தவறான உடல் நிலையில் மொபைல் போனைப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட தீவிர உடல்நலப் பிரச்சினைக்காக கழுத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.
படுக்கையில் ஒருபுறமாகச் சாய்ந்தபடி தொடர்ந்து பல மணி நேரம் மொபைல் கேம்ஸ் விளையாடியதுடன், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் நீண்ட நேரம் ரீல்ஸ்களையும் பார்த்ததாக அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், இதற்காக சுமார் ரூ.3 லட்சம் செலவானதாகவும் தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு கழுத்தில் காலர் அணிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், படுக்கையில் இருந்து எழுவது, சாப்பிடுவது உள்ளிட்ட அன்றாட செயல்களுக்குக்கூட தற்போது பிறரின் உதவி தேவைப்படுவதாக ஷகீலா தெரிவித்துள்ளார்.
சிகிச்சை குறித்து தனது அனுபவத்தைப் பகிர்ந்த அவர் வாழ்வில் அவர் கடந்து வந்த பல்வேறு கடிகமான சூழ்நிலைகள் மற்றும் விமர்சனங்கள் குறித்து பகிர்ந்துக்கொண்ட பேட்டியை முழுமையாக இந்த காணொளி வாயிலாக காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |