கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸில் கலந்து கொள்ள போகும் திருநங்கை யார் தெரியுமா? காட்டுத் தீயாய் பரவும் தகவல்
ஷகிலாவின் வளர்ப்பு மகள் பிக்பாஸ் 5ல் போட்டியாளராக பங்கேற்ப இருப்பதாக இணையத்தில் தகவல் பரவி வந்த நிலையில் அதை உறுதி செய்வது போல மிலா ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.
அவரின் சூசகமான இந்த பதிலால் அவர் நிச்சயம் சீசன் 5ல் இடம் பெறுவார் என்று நம்பப்படுகிறது.
திருநங்கையான மிலா ஒரு ஆடை வடிவமைப்பாளர் மற்றும் மாடல், நடிகையாவார். சமீபத்தில் அம்மா பெண்ணு இருவரும் இணைந்து நடத்தி போட்டோஷூட் இணையத்தில் வைரலாகின.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மிலா, சமீபத்தில் கேள்வி பதில் கலந்துரையாடலில் பங்கேற்றார் . அதில் ஒரு நெட்டிசன்ஸ் , நீங்கள் பிக் பாஸில் கலந்து கொள்வதாக செய்திகள் வெளிவருகிறதே இது உண்மையா என கேட்டுள்ளார்.
இதற்கு மிலா இரண்டு விரல்களையும் இணைந்து அதாவது பழம் விடுவது போல ஒரு சமிக்ஞை செய்துள்ளார். அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளதால் அவர் பிக்பாஸ் இல்லத்தில் நிச்சயம் இருப்பார் என்று நம்பப்படுகிறது.
