நடிகை ஷகீலா மகள் மிலா கர்ப்பமா? சோகத்துடன் அவர் வெளியிட்ட புகைப்பட பதிவு!
கவர்ச்சி புயல் நடிகை ஷகீலா 90ஸ் காலக்கட்டங்களில் பல மொழிகளிலும் ஏராளமான ஆபாச படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.
அண்மையில், இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டு பாராட்டை பெற்றார்.
இவருக்கு வளர்ப்பு திருநங்கையான மிலா என்பவரை தத்தெடுத்து மகளாக வளர்த்து வருகிறார். அவர் திருநங்கையாக மாறுவதற்கு முன்னர் தமிழில் ஒரு சீரியலில் நடித்திருந்தார்.
எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் பிஸியாகவே இருக்கும் நடிகை மிலா வித்தியாசமான, அழகழகான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.
அந்த வகையில், தற்போது கர்ப்பமாக இருப்பது போன்ற போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “என்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. இந்த போட்டோ ஷூட் மூலம் எனது கனவை நனவாகிவிட்டது என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு பெரியளவில் வைரலாக பலரும் சோகத்தில் ஆழ்ந்ததுடன் ஆறுதலையும் கூறி வருகின்றனர்.